மாரி செல்வராஜின் பைசன் திரைப்பட வசூல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் துருவ் - இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான பைசன் திரைப்படம் தீபாவளி வெளியீடாகத் தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
இதனால், பல பகுதிகளிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக படம் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், கூடுதல் திரைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இப்படம் உலகளவில் தமிழ் மொழியில் மட்டும் ரூ. 35 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இப்படம் வருகிற வெள்ளிக்கிழமையன்று தெலுங்கிலும் வெளியாகவுள்ளதால் அங்கும் கணிசமானத் தொகையை வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: ‘டியூட்’ படத்தில் பாடல்கள் பயன்படுத்தியதை எதிா்த்து இளையராஜா தனியாக வழக்குத் தொடரலாம் - உயா்நீதிமன்றம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.