ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கெட்டி மேளம் தொடரில் இருந்து நடிகர் சிபு சூர்யன் விலகியுள்ளார்.
இந்தத் தொடரில் சாயா சிங்கிற்கு ஜோடியாக சிபு நடித்து வந்த நிலையில், தற்போது விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 6.30 மணிக்கு கெட்டி மேளம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
லக்ஷ்மி நிவாசா என்ற கன்னட மொழித் தொடரின் மறு உருவாக்கமாக ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில், சாயா சிங், சிபு சூர்யன், விராட், செளந்தர்யா ரெட்டி, பிரவீனா, பொன்வண்ணன் உள்ளிட்டப் பலர் நடித்து வருகின்றனர்.
குடும்ப டிராமாவுடன் காதல் காட்சிகள் நிறைந்த இந்தத் தொடரில் சாயா சிங்கிற்கு ஜோடியாக சிபு சூர்யன் நடித்து வந்தார்.
தற்போது இவர், கெட்டி மேளம் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் இவரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கெட்டி மேளம் தொடரின் ரசிகர்களிடையேயும் இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற ஜீ குடும்ப விருதுகள் வழங்கும் விழாவில் சிபு சூர்யனுக்கு முக்கியத்துவம் அளிக்காததன் காரணமாகவே கெட்டி மேளம் தொடரில் இருந்து விலகியதாக தகவல் பகிரப்பட்டு வருகிறது.
ஜீ தமிழ் குடும்ப விருதுகள் விழாவில் எந்தவொரு பிரிவிலும் சிபு சூர்யன் நாமினேஷன் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | கூட்டுக் குடும்பம் அவசியமா? ஜீ தமிழில் புதிய தொடர், அண்ணாமலை குடும்பம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.