முகப்பு
கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை: முன்னணி பந்துவீச்சாளர் விலகல்.. நியூசிலாந்துக்குப் பின்னடைவு!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இருந்து நியூசிலாந்து பந்துவீச்சாளர் பிரேஸ்வெல் விலகுவதாகத் தெரிவித்துள்ளதைப் பற்றி...

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 12:45 PM
மைக்கேல் பிரேஸ்வெல்.
பகிர்:

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இருந்து நியூசிலாந்து பந்துவீச்சாளர் பிரேஸ்வெல் விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலுக்கு தீனி போட, டி20 உலக கோப்பை தொடரின் 10-ஆவது சீசன் சனிக்கிழமை (பிப். 7) கோலாகலமாகத் தொடங்கியது. மார்ச் 8 வரை நடைபெறும் இந்தத் தொடரில், மொத்தம் 20 அணிகள் குரூப் ஏ முதல் டி வரை ஒரு குரூப்புக்கு தலா 5 அணிகள் வீதம் பிரிக்கப்பட்டு போட்டி நடைபெறுகிறது. சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் அணிகள் தீவிரமாக விளையாடி வருகின்றன.

இந்தத் தொடரில் குரூப்-டி பிரிவில் உள்ள நியூசிலாந்து அணி இதுவரை இரண்டுப் போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில், நியூசிலாந்து அணியின் முன்னணி பந்துவீச்சாளரும், ஒருநாள் அணியின் கேப்டனுமான மைக்கேல் பிரேஸ்வெல் டி20 தொடரில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியின் போது தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசைநார் கிழிந்தது. அதன்பின்னர், காயத்தில் இருந்து குணமடைந்த அவர் பிப். 8 ஆம் தேதி சென்னையில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது மீண்டும் காயமடைந்தார்.

இதனால், பிரேஸ்வெல் விலகியதன் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பென் சியர்ஸுடன் இணைந்து , சுழற்பந்து வீச்சாளர் ஆல்-ரவுண்டர் கோல் மெக்கன்ஸி அணியில் இணைந்துள்ளார்.

summary

The Event Technical Committee of the ICC Men’s T20 World Cup 2026 have approved Cole McConchie as a travelling reserve in Michael Bracewell's stead in the New Zealand squad.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.