நடிகர் விக்ரம் தன் மகன் துருவ்வால் பெருமையடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
துருவ் கதாநாயகனாக நடித்த பைசன் காளமாடன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமான வணிகத்தைச் செய்து வருவதுடன் விமர்சன ரீதியாக பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
முக்கியமாக, துருவ்வின் கடின உழைப்பையும் நடிப்பையும் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பைசன் வெற்றியால் நடிகர் விக்ரமும் உற்சாகமடைந்துள்ளார். படப்பிடிப்பின்போது பேருந்தையொட்டி ஓடி வரும் காட்சியில், பேருந்தை வேகமாகச் செலுத்துங்கள் எனக் கூறியபடி துருவ் ஓடி வருகிறார்.
இந்த விடியோவைப் பகிர்ந்த நடிகர் விக்ரம், “தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்கிற பழமொழியைக் குறிப்பிடும் விதமான எண்களைப் பதிவிட்டு, உன்னால் பெருமையடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பைசன் வசூல் அறிவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.