பிளாக்மெயில் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
பிளாக்மெயில் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து...
ஜி.வி. பிரகாஷ் நடித்த பிளாக்மெயில் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கடைசியாக தயாரித்து நடித்த கிங்ஸ்டன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து, அவர் நடித்துள்ள திரைப்படம் பிளாக்மெயில்.
இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே படங்களின் இயக்குநர் மு. மாறன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
Advertisement
Advertisement
இந்தப் படத்தில் தேஜு அஸ்வினி, பிந்து மாதவி, திலக் ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். சாம். சிஎஸ் இசையமைத்துள்ளார்.
திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டு, கடந்த செப். 12 ஆம் தேதி வெளியான இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த நிலையில், பிளாக்மெயில் திரைப்படம் வரும் அக். 30 தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இதையும் படிக்க: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புயல் சின்னம்!
The OTT release date of G.V. Prakash starrer Blackmail has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.