நடிகர் சிவகுமாரின் பிறந்த நாளுக்கு, கமல்ஹாசன் வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த 1965 ஆம் ஆண்டு வெளியான காக்கும் கரங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவகுமார். 1967-ல் வெளியான கந்தன் கருணை படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இவர் கடைசியாக, 2001-ல் வெளியான அஜித், ஜோதிகாவின் பூவெல்லாம் உன் வாசம் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து, சித்தி, அண்ணாமலை என தொலைகாட்சித் தொடர்களில் நடித்தார்.
நடிப்பை நிறுத்திவிட்ட சிவகுமார், கம்பராமாயணம், திருக்குறள் என சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் சிவகுமார் தன்னுடைய பிறந்த நாளை, இன்று(அக். 27) கொண்டாடிவரும் நிலையில், அவருக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் பதிவில், “சிவகுமாரண்ணே, 84 மார்க் போதாது… நூறுதான் நல்ல மார்க்” என்று தெரிவித்து வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.