மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் மயிசாமி புதிய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தத் தொடருக்கு சுற்றும் விழிச் சுடரே எனப் பெயரிடப்பட்டுள்ளது.
முதல்முறையாக சின்ன திரையில் நடிக்கும் யுவன் மயில்சாமிக்கு ஜோடியாக நடிகை வினுஷா தேவி நடிக்கவுள்ளார். இந்தத் தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் தொலைக்காட்சியில் புதிய தொடர்களுக்கு மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில் தொடர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் தற்போது யுவன் மயில்சாமி நடிக்கும் புதிய தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. சுற்றும் விழிச் சுடரே என்ற இந்தத் தொடரில் வினுஷா தேவி நடிக்கவுள்ளார்.
பாரதி கண்ணம்மா -1, பாரதி கண்ணம்மா -2, பனிவிழும் மலர்வனம் ஆகிய தொடர்களில் வினுஷா தேவி நடித்துள்ளார். இது இவருக்கு 4வது தொடராகும்.
வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிக்கும் இந்தத் தொடர் ஸ்டார்மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மனங்களைக் கவர்ந்த சின்னி என்ற தொடரின் மறுஉருவாக்கமாகும்.
இதையும் படிக்க | அன்னம் தொடரிலிருந்து விலகிய திவ்யா கணேசன்! பிக் பாஸ் செல்கிறாரா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.