பேட் கேர்ள் படத்தின் போஸ்டர், வெற்றி மாறன்.  படங்கள்: எக்ஸ் / கிராஸ் ரூட்ஃபிலிம் கோ.
செய்திகள்

பேட் கேர்ள் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

பேட் கேர்ள் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

பேட் கேர்ள் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர்கள் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் வழங்கும் பேட் கேர்ள் திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்த வர்ஷா பரத் இயக்கியுள்ளார்.

இப்படம் ரோட்டர்ராமில் நடைபெறவுள்ள 54-ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருது வென்றது. தொடர்ந்து, செப்டம்பர் 5ஆம் தேதி இந்தப் படம் திரையரங்கில் வெளியானது.

இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரமான அஞ்சலி சிவராமன் உள்பட சாந்தி பிரியா, ஹிரிது ஹருண், டிஜே அருணாசலம், சரண்யா ரவிச்சந்திரன் என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு பிரபல ஹிந்தி இசையமைப்பாளர் அமித் திரிவேதி இசையமைத்துள்ளார்.

இன்றைய இளம் தலைமுறையைச் சேர்ந்த பெண்ணின் சுதந்திரமான முடிவுகள், காதல் தேர்வுகளை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டு, கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில், பேட் கேர்ள் திரைப்படம் ஜியோ ஹாட் ஸ்டாரில் வரும் நவ. 4 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The OTT release date of the film Bad Girl has been officially announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரீபெய்டு ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை கைவிட புதுவை மாா்க்சிஸ்ட் கோரிக்கை!

4 உதவிப் பொறியாளா்களுக்குப் பதவி உயா்வு

நெல் ஈரப்பதம்: கடலூா் மாவட்டத்தில் மத்தியக் குழு ஆய்வு

10 ஆண்டுகளுக்குப் பிறகு செஞ்சி வேளாண்மை உற்பத்தியாளா் விற்பனை சங்கத்தில் நெல் கொள்முதல் தொடக்கம்!

செஞ்சி வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடன் வழங்குவதில் தாமதம்! விவசாயிகள் பாதிப்பு!

SCROLL FOR NEXT