பிக் பாஸ் போட்டியாளர்கள் படம் - எக்ஸ்
செய்திகள்

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேற வாய்ப்புடைய நபர்களின் பட்டியல்!

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் 4வது வாரத்தில் வெளியேற வாய்ப்புடைய நபர்களின் பட்டியல் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் 4வது வாரத்தில் வெளியேற வாய்ப்புடைய நபர்களின் பட்டியல் குறித்து தெரியவந்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் இந்த வாரம் போட்டியில் நீடிக்கத் தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில் இருவருக்கு வாக்களிக்கலாம். அதிக வாக்குகள் பெற்ற நபர்கள் இந்த வார நாமினேஷன் பட்டியலில் வைக்கப்படுவார்கள்.

இவர்களுக்கு மக்கள் இந்த வாரம் முழுக்க வாக்களிக்க வேண்டும். இதில் குறைந்த வாக்குகளைப் பெற்ற ஒரு நபர் இந்த வார இறுதியில் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்.

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 5 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 20 ஆண்கள், 20 பெண்கள் இப்போட்டியில் பங்கேற்றிருந்த நிலையில், முதல் வாரம் தாமாகவே முன்வந்து நந்தினி வெளியேறினார்.

முதல் வார இறுதியில் இயக்குநர் பிரவீன் காந்தியும், இரண்டாவது வார இறுதியில் திருநங்கை அப்சராவும், மூன்றாவது வார இறுதியில் ஆதிரையும் குறைந்த வாக்குகளைப் பெற்றதால் வெளியேறினர்.

தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்த 16 நபர்களில் இந்த வாரக் கேப்டனாக பிரவீன் தேர்வானதால் அவரை நாமினேஷன் செய்ய இயலாது. இதேபோன்று பிக் பாஸ் வீட்டிற்குச் சென்றுள்ள கனி திரு, நாமினேஷன் ஃபிரீ பாஸ் வென்ற சுபிக்‌ஷா, இவர் காப்பாற்றிய வியானா என நான்கு பேரையும் நாமினேஷன் செய்ய இயலாது.

எஞ்சியவர்களில் பிக் பாஸ் போட்டியில் தொடரத் தகுதியற்ற 2 நபர்கள் யார் என்பதை சகப் போட்டியாளர்கள் தெரிவிக்க வேண்டும். இதில் அதிக வாக்குகளைப் பெற்ற நபர் வெளியேற வாய்ப்புடைய நபர்களின் பட்டியலில் வைக்கப்படுவார்.

அந்தவகையில் இந்த வாரம் இப்பட்டியலில் விஜே பார்வதி, கமுருதீன், கானா வினோத், கலையரசன், அரோரா ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் உள்ளனர்.

இந்த பட்டியலில் உள்ளவர்களுக்கு மக்கள் இந்த வாரம் முழுக்க வாக்குச் செலுத்த வேண்டும். அதிக வாக்குகளைப் பெற்று மக்கள் ஆதரவைப் பெற்றவர் பாதுகாக்கப்படுவார்.

குறைந்த வாக்குகளைப் பெற்ற நபர் தகுதியற்றவர் என உறுதிசெய்யப்பட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார். இந்த வாரம் போட்டியிலிருந்து வெளியேறும் நபர் யா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க | பிக் பாஸ்: எல்லை மீறிய கம்ருதின்! பார்வதி குற்றச்சாட்டு!

Bigg boss 9 tamil 4th week nomination list

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வகுப்புவாதம், வெறுப்பு அரசியலுக்கு எதிராக ராகுல்: சசி தரூர்

தமிழக அரசின் விருது வென்ற துஷாரா விஜயன் கூறியதென்ன?

நாட்டின் மிகச் சிறிய பட்ஜெட் பற்றி தெரியுமா!

மணப்பேறு, மகப்பேறு அருளும் கோயில்

துயர் நீக்கிய தலம்!

SCROLL FOR NEXT