செய்திகள்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பர் ஹிட் படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பர் ஹிட் படங்கள் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

இட்லி கடை

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த இட்லி கடை கடந்த அக். 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்தப் படத்தில் நாயகியாக நித்யா மெனனும் வில்லனாக அருண் விஜய்யும் நடித்திருக்கின்றனர். மேலும் ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரகனி, சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

லோகா

துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவான ’லோகா சேப்டர் 1: சந்திரா’ படம் கடந்த ஆக. 28 ஆம் தேதி வெளியானது.

கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லன் நடிப்பில் உருவான இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் கல்யாணி நடித்திருந்தார். இப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளம், தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மராத்தி மற்றும் வங்க மொழிகளில் வெளியாகிறது.

காந்தாரா சாப்டர் 1

நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த திரைப்படமான காந்தாரா சாப்டர் 1, அக்டோபர் 31 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

பிளாக்மெயில்

இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான பிளாக்மெயில் படத்தில் தேஜு அஸ்வினி, பிந்து மாதவி, திலக் ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். சாம். சிஎஸ் இசையமைத்துள்ளார்.

திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட பிளாக்மெயில் திரைப்படம் வரும் அக். 30 தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

சொட்ட சொட்ட நனையுது

நவீத் பரீத் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ நாயகனாக நடித்து வர்ஷினி, ஷாலினி, ஆனந்த் பாபு, நடன இயக்குநர் பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சொட்ட சொட்ட நனையுது.

இந்தத் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வரும் அக். 31 ஆம் தேதி வெளியாகிறது.

கடந்த வார ஓடிடி

சக்தித் திருமகன் படத்தை, ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் தே கால் ஹிம் ஓஜி படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்திலும் பரம் சுந்தரி திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலும் பார்க்கலாம்.

This week ott films list

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதெல்லாம் பழைய செய்தி! EPS பேச்சுக்கு OPS பதில்!

இடைக்கால பட்ஜெட்: பிப். 5ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

மகாத்மா காந்தி நினைவு நாள்! முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

பத்மநாப சுவாமி கோயிலில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தரிசனம்!

உங்க Washing machine-ல் அதிமுகவை வெளுத்துட்டீங்களா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி | BJP

SCROLL FOR NEXT