ரூ. 100 கோடி வசூலித்த லோகா!
லோகா வசூல் குறித்து...
கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் ஓணம் திருவிழாவையொட்டி திரைக்கு வந்துள்ள 'லோகா' திரைப்படம் மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
துல்கர் சல்மான் தயாரிப்பில் டோமினிக் அருண் இயக்கத்தில் சூப்பர்ஹீரோ கதையாக உருவான இப்படம் வசூலில் அசத்தி வருகிறது. எதிர்பாராத அளவிற்கு லோகாவுக்கு நல்ல விமர்சனங்களும் பாராட்டுகளும் கிடைத்து வருவதால் தமிழகத்திலும் இப்படத்திற்கு கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்யாணி பிரியதர்ஷனை வைத்தே இப்படம் வெளியான ஓரே வாரத்திற்குள் ரூ. 100 கோடியை வசூலித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
மேலும், வருகிற வெள்ளிக்கிழமை கேரளத்தில் ஓணம் என்பதால் பல திரையரங்குகளில் 6 காட்சிகளாக அதிகாலை வரை லோகா திரையிடப்படுகிறதாம். இதனால், இந்தாண்டு வெளியான மலையாளப் படங்களில் லோகா வசூல் சாதனையைச் செய்யலாம் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கல்யாணி பிரியதர்ஷனால் மீண்டும் வைரலான இளையராஜா பாடல்!
lokah movie crossed rs.100 crores in box office
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.