செய்திகள்

ஆஹா... கலக்கலா இருக்கே சாய்! கேட்க கேட்க பிடிக்கும் ஊறும் பிளட்!

ஊறும் பிளட் பாடல் டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது...

இணையதளச் செய்திப் பிரிவு

இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் முதல் தமிழ்ப் பாடல் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “டூட்”. மலையாள நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு, சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடலான ‘ஊறும் பிளட்’ பாடல் கடந்த வியாழக்கிழமை வெளியானது. இதுவே, சாய் அபயங்கரின் முதல் தமிழ் சினிமா பாடலாகும். இதற்கு முன் வெளியான மலையாளப் படமான பல்டியில் இடம்பெற்ற ஜாலக்காரி பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

ஆனால், சாய் அபயங்கரின் முதல் தமிழ்ப் பாடலான ஊறும் பிளட் ஒன்றுமே புரியாத வகையில் இருப்பதாகவும் இசையை ரசிக்கவும் முடியவில்லை என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

தற்போது, ஆச்சரியப்படும் வகையில் இப்பாடலை முதலில் புறக்கணித்தவர்கள்கூட மீண்டும் கேட்க கேட்க நன்றாக இருப்பதாகக் கூறி வருகின்றனர். பால் டப்பா எழுதிய இப்பாடலின் வரிகளான, “ஒரு அலை அவ, கலை அவ, அழகிய நிலவு அவ, நிலவில் ஜொலிக்கிற நிரந்தர ஒளி அவ” என்கிற வரிகளும், “ராஜாதி ராஜன் நான், ராவான ராவணா” வரிகளும் 2கே ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்பாடல் திரும்பத் திரும்பக் கேட்கப்பட்டு வருவதால் யூடியூபில் இதுவரை 10 கோடி பார்வைகளை நெருங்கியதுடன் சாய் அபயங்கருக்கு வாழ்த்துகளுக்கும் குவிந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10,000-ஐக் கடந்தது!

செங்கோட்டையன் கெடு! இபிஎஸ் அவசர ஆலோசனை!

மோடி எனது நண்பர்; சிறந்த பிரதமர்! மாற்றிப் பேசும் டிரம்ப்!

பெண்களை தொடக்கூடாது.. தலிபான்களின் உத்தரவால் துயரம்

ஜெர்மனி, பிரிட்டன் பயணத்தில் ரூ. 15,516 கோடி முதலீடு ஈர்ப்பு: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT