விஜய் சேதுபதி 
செய்திகள்

பிக் பாஸ் - 9 ஒளிபரப்பு தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிக் பாஸ் - 9 நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தேதி குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பிக் பாஸ் - 9 நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் வெளி உலகத் தொடர்பின்றி 100 நாள்கள் இருக்க வேண்டும், இடையிடையே நடக்கும் போட்டிகளிலும் வெற்றிப் பெற வேண்டும்.

வார வாரம் நடக்கும் எலிமினேஷனில்(வெளியேற்றம்) மக்கள் மனங்களைக் கவர்ந்த போட்டியாளர் நிகழ்ச்சியில் நீடிப்பார். குறைந்த வாக்குகளைப் பெற்றவர்கள் ஒவ்வொரு வாரமும் வெளியேற்றப்படுவார்.

விளையாட்டுப் போட்டிகள் மட்டுமல்லாமல் மனரீதியாக நடத்தப்படும் போட்டிகளிலும் பங்கெடுத்து வெற்றிப் பெற வேண்டும்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 9வது சீசன் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்குகிறது. அன்று நடைபெறும் தொடக்க நாள் நிகழ்ச்சியில், பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தெரியவரும்.

கடந்த சீசனை விஜய்சேதுபதி தொகுத்து வழங்கிய நிலையில், புதிய 9வது சீசனையும் விஜய்சேதுபதியே தொகுத்து வழங்கவுள்ளார்.

பிக் பாஸ் - 9 நிகழ்ச்சியில் சின்ன திரை நடிகை நக்‌ஷத்ரா, நடனக் கலைஞரும் சமையல் நிகழ்ச்சியின் பங்கேற்பாளருமான ஜன்மோனி டோலி, பாக்கியலட்சுமி தொடர் பிரபலம் நேஹா, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சின்ன திரை நடிகர் புவியரசு, நடிகர் உமர், நடிகை பாடினி குமார் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை இந்த முறையும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளதால், புதிய சீசனில் அவரைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காத்திருக்கின்றனர்.

The broadcast date of Bigg Boss - 9 has been officially announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்மீது ஏன் இவ்வளவு அன்பு? விடியோ வெளியிட்ட இளையராஜா!

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 19 வயது இளைஞர் கைது!

வெள்ளி மலரே... ஐஸ்வர்யா ராஜேஷ்!

விஜய் குறித்து கருத்தோ, விமரிசனமோ செய்ய விரும்பவில்லை: பிரேமலதா விஜயகாந்த்

சாலையோரம் சுருண்டு கிடந்த 10 அடி நீள மலைப்பாம்பு! பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!

SCROLL FOR NEXT