லிங்கா, தனுஷ்.  படம்: இன்ஸ்டா / தனுஷ் ரசிகன்
செய்திகள்

மகனை கிண்டல் செய்த தனுஷ்..! வெட்கத்தில் தலைகுனிந்த லிங்கா!

நடிகர் தனுஷ் தனது மகனை கிண்டல் செய்தது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் தனுஷ் தனது மகன் லிங்காவை இட்லி கடை இசை வெளியீட்டு விழாவில் கிண்டல் செய்தது சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

நடிகர் தனுஷ் இட்லி கடை படத்தினை இயக்கி நடித்துள்ளார். நடிகை நித்யா மெனன், சமுத்திரக்கனி, அருண் விஜய், சத்யராஜ், ஷாலினி பாண்டே என பலர் நடித்துள்ளார்கள்.

லிங்கா என்ன செய்தார்?

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றிரவு நடந்தது. இந்த விழாவில் படத்தில் நடித்த பலருடன் தனுஷின் இளைய மகன் லிங்காவும் கலந்துகொண்டு இருந்தார்.

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மகன் என்பதால் இவர் தனுஷ், ரஜினி என இவர்களது விழாவுக்கு தவறாமல் சென்றுவிடுவார்.

ரஜினியின் கூலி இசை வெளியீட்டு விழாவுக்கும் வந்திருந்த லிங்கா தனது மொபைலில் ரஜினியின் பேச்சுகளை விடியோ எடுத்துகொண்டு இருப்பார்.

லிங்கா இப்படியாக, பல இசை வெளியீட்டு விழாக்களில் அவர் இப்படி செய்வதைக் குறிப்பிட்டு, “உன்னிடம் எவ்வளவுதாண்டா ஸ்டோரேஜ் இருக்கு?” எனக் கிண்டலாக பலரும் மீம்ஸ்களை உருவாக்கியது இணையத்தில் வைரலாகின.

கிண்டல் செய்த தனுஷ்

இந்நிலையில், இட்லி கடை விழாவில் அவர் அமைதியாக உட்கார்ந்திருந்தார். தனுஷ் மேடையில், “என்ன லிங்கா? என்னையெல்லாம் விடியோ எடுக்க மாட்டியா?” எனக் கேட்பார். அதற்கு லிங்கா வெட்கத்தில் சிரித்துக்கொண்டே தலையைக் குனிந்து கொள்வார்.

தனுஷ் இன்னொரு முறை ஃபங்க் ஹேர் ஸ்டைல் குறித்து பேசும்போதும் லிங்கா வெட்கத்தில் சிரித்தார்.

பின்னர், லிங்கா தனது தந்தை தனுஷுடன் சேர்ந்து மேடையில் நடனம் ஆடியதும் குறிப்பிடத்தக்கது.

தனுஷ் அந்த மீம்ஸைப் பார்த்துதான் இப்படி கிண்டல் செய்ததாகப் பலரும் சமூக வலைதளத்தில் ஜாலியாகப் பேசி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT