நடிகை ருக்மணி வசந்த்  
செய்திகள்

இனி நேஷனல் க்ரஷ் ருக்மணிதான்!

நடிகை ருக்மணி வசந்த் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகை ருக்மணி வசந்துக்கு இந்தியளவில் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.

கன்னடத்தில் இரண்டு பாகங்களாக வெளியான ‘சப்த சாகரதாச்சே எல்லோ - சைட் ஏ', ‘சைடு பி’ ஆகிய படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ருக்மணி வசந்த். கன்னட ரசிகர்களை மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழிகளிலும் இந்தப் படம் கவனம் பெற்றது.

இதனை தொடர்ந்து ருக்மணி வசந்த், விஜய் சேதுபதியுடன் ஏஸ் திரைப்படத்திலும் சிவகார்த்திகேயனுடன் மதராஸியிலும் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.

தற்போது, இவர் நடித்த காந்தாரா - 2 அக்டோபர் 2 ஆம் தேதியும் இயக்குநர் பிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆருடனான படம் அடுத்தாண்டும் வெளியாகிறது.

இந்த நிலையில், சேலை மற்றும் மாடர்ன் உடைகளில் ரசிகர்களைத் திணறடிக்கும் ருக்மணிக்கு இந்தியளவில் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.

ருக்மணி வசந்த்

சிரிப்பும் சோகத்தை பளிச்சென ருக்மணியால் வெளிப்படுத்த முடிவதால், பலரும் நவீன கன்னட பைங்களி எனச் செல்லமாக அழைத்து வருகின்றனர்.

முக்கியமாக, இன்ஸ்டாகிராமில் நிறைய ரீல்ஸ்கள் ருக்மணிக்காக உருவாக்கப்பட்டு அவரை இந்தியாவின் புதிய கிரஷ் (crush) எனக் கொண்டாட ஆரம்பித்திருக்கின்றனர்.

fans celebrates actor rukmini vasanth's beauty

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனுஷின் 55 ஆவது படத்துக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

குற்றவாளிகளைக் காப்பாற்ற திமுக அரசு எந்த எல்லைக்கும் செல்கிறது! - அண்ணாமலை விமர்சனம்

கொள்ளை அடிப்பதில் மட்டுமே கவனம்; பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் இல்லை: விஜய்

ராக் ஸ்டார் இயக்குநரின் புதிய பட வெளியீட்டுத் தேதி!

காவல்துறையினருக்கு பிறந்தநாள், திருமண நாளில் சிறப்பு விடுப்பு..! -கர்நாடக டிஜிபி உத்தரவு

SCROLL FOR NEXT