ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தங்கள் பாடல்களைப் பயன்படுத்தியதற்காக சோனி மியூசிக் இந்தியா இழப்பீடு கோரியுள்ளது.
தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் அக்னிபாத் படத்தின் சிக்னி சமேல் மற்றும் கோரி தேரி பியார் மெய்ன் படத்தின் தாத் தேரி மெயின் ஆகிய இரு பாடல்கள் பயன்படுத்தப்பட்டது.
இந்த இரு பாடல்களுக்கும் சோனி மியூசிக் இந்தியா உரிமம் பெற்றுள்ள நிலையில், பொது உரிமங்களை ஃபோனோகிராபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடெட் (Phonographic Performance Limited - PPL) நிர்வகித்து வருகிறது. இந்தப் பாடல்களை நிர்வகித்து வரும் நிறுவனங்களின் அனுமதியோ அங்கீகாரமோ பெறாமல், அவற்றைப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.
இந்த நிலையில்தான், இந்த இரு பாடல்களையும் அனுமதி பெறாமல் பயன்படுத்தியதற்காக ரூ. 2 கோடி இழப்பீடு மற்றும் உரிமக் கட்டணத்தைக் கோரி, பிக்பாஸ் 19 நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்களுக்கு பிபிஎல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிக்பாஸ் 19 நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வரும் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு, சம்பளமாக ரூ. 120 கோடி முதல் 150 கோடி வரையில் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: ரூ.1,330 கோடி சொத்து! டிரம்ப்பின் 19 வயது மகன் அசத்தியது எப்படி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.