நடிகர் ரிஷப் ஷெட்டி  
செய்திகள்

தெலுங்கு புரமோஷனில் கன்னடம்... விமர்சனத்திற்கு ஆளான ரிஷப் ஷெட்டி!

நடிகர் ரிஷப் ஷெட்டி கன்னடத்தில் பேசியது சர்ச்சையாகியுள்ளது...

இணையதளச் செய்திப் பிரிவு

காந்தாரா சேப்டர் 1 தெலுங்கு புரமோஷனில் நடிகர் ரிஷப் ஷெட்டி கன்னடத்தில் பேசியது விமர்சிக்கப்பட்டு வருகிறது.

நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படமான காந்தாரா சேப்டர் 1 வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கத்தால் இப்படத்திற்கு இந்தியளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. அனைத்து மொழிகளிலும் சேர்த்து 17 கோடி பார்வைகள் டிரைலருக்கு கிடைத்துள்ளதால் வணிக ரீதியாகவும் இப்படம் சாதனை புரியும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் நடந்த காந்தாரா - 1 புரமோஷனில் கலந்துகொண்ட ரிஷப் ஷெட்டி கன்னடத்தில் பேசினார். இதனைக் கேட்ட ரசிகர்கள், தெலுங்கு பேசாமல் ரிஷப் ஷெட்டி கன்னடத்தில் பேசியது கண்டிக்கத்தக்கது என விமர்சித்து வருகின்றனர்.

உண்மையிலேயே, ரிஷப்புக்கு தெலுங்கு தெரியாதா இல்லை கன்னடத்தில் பேசும் முடிவோடு வந்தாரா எனத் தெரியவில்லை.

அதேநேரம், தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளிலேயே நேர்காணல்களை அளித்து வரும் ரிஷப் ஷெட்டிக்கு தெலுங்கு மட்டும் தெரியாதா என்றும் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

இதையும் படிக்க: கைதி - 2 நிலைமை என்ன?

actor rishab shetty faces controversy about using kannada instead of telugu in hyderabad event.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் பலி: பாஜக தனது அரசியல் விளையாட்டை தொடங்கிவிட்டது - திருமா | செய்திகள்: சில வரிகளில் | 30.9.25

பழைய ஓய்வூதியத் திட்டம்: தமிழக அரசிடம் இடைக்கால அறிக்கை சமர்பிப்பு!

தவெக ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு!

நியூசி.க்கு எதிரான டி20 தொடரிலிருந்து மேக்ஸ்வெல் விலகல்!

பிகார் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT