லெனின் பாண்டியன் படத்தின் முதல் பாடல் எப்போது?
லெனின் பாண்டியன் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு தொடர்பாக....
சிவாஜி பேரன் நடிப்பில் உருவான லெனின் பாண்டியன் திரைப்படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
மறைந்த நடிகர் சிவாஜியின் பேரனும் ராம்குமாரின் மகனுமான தர்ஷன் கணேசன் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் லெனின் பாண்டியன்.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் கங்கை அமரனும் நடிகை ரோஜாவும் நடித்துள்ளனர். டிடி பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவான இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Advertisement
சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ள இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
மணல் கொள்ளையை எதிர்க்கும் காவலரின் கதையாக இப்படம் உருவாகி இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அண்மையில் இப்படத்தின் டிரைலர் வெளியானது.
இந்த நிலையில், லெனின் பாண்டியன் படத்தின் முதல் பாடலான ‘உன்னை நம்பி’ பாடல் வரும் ஏப். 27 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.