நடிகை ரிமா கல்லிங்கல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புத்தாண்டை முன்னிட்டு வாழ்க்கைத் தத்துவம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் தன்னடகத்துடன் இருக்க வேண்டும் என்பதை வலியிறுத்தி புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.
மலையாள நடிகை ரிமா கல்லிங்கல் ( 41 வயது) 2009ஆம் ஆண்டு ரிது எனும் படத்தில் அறிமுகமானார். தமிழில் கோ படத்தில் அறிமுகமானார்.
இயக்குநர் ஆஷிக் அபுவை திருமணம் செய்த இவர் தனியாக ஒரு நடன பள்ளியையும் நடத்தி வருகிறார்.
தயாரிப்பாளராகவும் நடிகையாகவும் இருக்கும் ரிமா கல்லிங்கல் பயணத்தின் மீது மிகவும் விருப்பம் கொண்டவராக இருக்கிறார்.
கடைசியாக இவரது நடிப்பில் 2025-இல் தியேட்டர் எனும் திரைப்படம் வெளியானது. விரைவில் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களைப் பதிவிட்டு அவர் கூறியதாவது:
தன்னடக்கத்துடன் இருங்கள்! காடு உங்களின் இடத்தை காட்டும்... பெரிய படத்துடன் தொடங்குவது ஒரு நல்ல விஷயம். காட்டுப் பகுதியில் உள்ள சிம்மினி அணையின் மத்தியில் இருந்து இந்த ஆண்டு தொடங்குகிறது.
அழகான, அமைதியான இந்த இடம் உங்களுக்கு உத்வேகம் ஊட்டும். கூடுதல் புகைப்படங்களை விரைவில் பதிவிடுவேன் எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.