ரஜினி 173 போஸ்டர், ரஜினியுடன் சிபி சக்கரவர்த்தி.  படங்கள்: எக்ஸ் / சிபி சக்கரவர்த்தி.
செய்திகள்

நம்பிக்கையைக் காப்பாற்ற கடினமாக உழைப்பேன்... ரஜினி 173 பட இயக்குநர் உறுதி!

நடிகர் ரஜினியின் 173-ஆவது படத்தின் இயக்குநர் கூறியதாவது...

இணையதளச் செய்திப் பிரிவு

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கமல் தயாரிப்பில் நடிகர் ரஜினி நடிக்கும் படத்தின் இயக்குநராக சிபி சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.

2027 பொங்கலுக்கு வெளியாகும் இந்தப் படத்தினைக் குறித்து இயக்குநர் சிபி சக்கரவர்த்தி தனது மகிழ்ச்சியை எக்ஸ் பதிவில் வெளிப்படுத்தியுள்ளார்.

கிராமத்தில் இருக்கும் ஒரு சிறுவனின் கனவு...

அதில் அவர் கூறியதாவது:

ஒரு காலத்தில் சிறிய கிராமத்தில் இருக்கும் ஒரு சிறுவனின் கனவு தனக்கு மிகவும் பிடித்த நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்து புகைப்படம் எடுக்க வேண்டுமென்பதுதான் கனவாக இருந்தது.

தன்னை சினிமாவை நோக்கி நகர்த்திய அவருடனான கனவு ஒருநாள் நனவாகும்.

அந்தச் சிறுவனின் மிகப்பெரிய கனவாக சூப்பர் ஸ்டாரை இயக்குவது என்பதுதான். ஒரு கட்டத்தில் அந்த வாய்ப்பு அருகில் வந்து, தவறியது. இருந்தும் அதுவும் ஒருநாள் நடக்குமென அவன் நம்பிக்கையுடன் இருந்தான். அதுதான் இன்றைய நாள்.

நம்பிக்கையைக் காப்பாற்ற கடினமாக உழைப்பேன்

’கனவு நனவாகும். அற்புதங்கள் நடக்கும்’ என தலைவர் ரஜினி கூறியதுதான் ஞாபகத்துக்கு வருகிறது.

சிறிது காலத்துக்குப் பிறகு, வாழ்க்கை கனவை தாண்டிச் சென்றுள்ளது. பத்மஸ்ரீ, உலக நாயகன் கமல்ஹாசன், மகேந்திரன் சார் தயாரிப்பாளர்களாகக் கிடைத்திருக்கிறார்கள்.

ரஜினி சார், கமல் சார், மகேந்திரன் சாருக்கு எப்போதும் நன்றியுடன் இருப்பேன். என் உடல் மற்றும் ஆன்மாவின் உழைப்பைக் கொடுத்து உங்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன். மீண்டும் அனிருத் உடன் வேலை செய்வது மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார்.

ஏற்கெனவே, நடிகர் ரஜினியை டான் படத்துக்குப் பிறகு சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக இருந்தது. பின்னர் அது தவறிவிட்டது. தலைவர் 173 படத்தை சுந்தர் சி இயக்குவதாக அறிவித்து பின்னர் அவர் விலகியதும் குறிப்பிடத்தக்கது.

Once, a small-town boy’s big dream was to meet his favourite star saya Rajini 173 director Cibi Chakaravarthi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆசிரியா்கள் பள்ளிக்குத் திரும்ப வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஸ்

திருப்பரங்குன்றம் தீப தீா்ப்பு: பாஜக, தமாகா வரவேற்பு

‘வாக்காளா் பட்டியலைத் திருத்த முழு அதிகாரம் உண்டு’- உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் வாதம்

உள்வாடகை வீடு முறையில் மோசடி: எஸ்.பி. எச்சரிக்கை

கன்னியாகுமரிக்கு ஆட்டோவில் வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT