துருவ நட்சத்திரம் வெளியீடு குறித்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசியுள்ளார்.
இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி, 8 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியாகாமல் இருக்கும் படம் துருவ நட்சத்திரம். ஆக்சன், திரில்லர் பாணியில் உருவான இப்படம், தயாரிப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட நிதி பிரச்னையால் இன்னும் திரைக்கு வராமல் இருக்கிறது.
இப்படத்தின் டீசர், டிரைலர் காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தபோதும் பலமுறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு இறுதி நேரத்தில் வெளியீடு சிக்கல்களைச் சந்தித்தது.
இந்த நிலையில், இப்படம் குறித்த கேள்விக்கு இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், “துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்கான பிரச்னைகள் முடிந்தது. விரைவில், வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக கௌதம் மேனம் இதையே சொல்வதும், இறுதியில் படம் ஒத்திவைக்கப்படுவதுமாகவே இருக்கிறது. இம்முறையாவது வெளியாகுமா? பார்ப்போம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.