முகப்பு
செய்திகள்

கருப்பு வெளியீடு அப்டேட்!

கருப்பு வெளியீடு குறித்து...

Updated On : 6 ஜனவரி, 2026 at 12:02 PM
பகிர்:

சூர்யா நடித்த கருப்பு திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த கருப்பு திரைப்படம், நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக வைத்து அதில் கடவுள் நம்பிக்கைகளை இணைத்து உருவாகியுள்ளது.

இதில் வழக்குரைஞரான சூர்யாவுடன் த்ரிஷா, ஸ்வாசிகா, காளி வெங்கட், இந்திரன்ஸ், யோகி பாபு, நட்டி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிக தொகைக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், சாட்டிலைட் உரிமத்தை ஜீ5 நிறுவனமும் கைபற்றியுள்ளதாம்.

இந்த நிலையில், பிரபல திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியன், கருப்பு திரைப்படத்தை ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பொங்கல் அன்று இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →