பிரவீன்ராஜ் தேவசகாயம் படம் - எக்ஸ்
செய்திகள்

தெலுங்கில் 2 படங்களில் ஒப்பந்தமான பிக் பாஸ் பிரவீன்!

பிக் பாஸ் வீட்டில் 33 நாள்கள் மட்டுமே இருந்த பிரவீன்ராஜ் தேவசகாயம் 2 படங்களில் நடித்து வருவது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

தெலுங்கில் இரண்டு படங்களில் பிக் பாஸ் போட்டியாளரான பிரவீன்ராஜ் தேவசகாயம் ஒப்பந்தமாகியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்துள்ள பிரவீன்ராஜ், தனக்கு கிடைத்துள்ல பட வாய்ப்புகள் குறித்துப் பேசினார்.

இதில், பாபி சிம்ஹாவின் 25வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும், அப்படம் தெலுங்கில் உருவாகி வருவதாகவும் கூறினார். இதேபோன்று மற்றொரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 13 வது வாரத்தை எட்டியுள்ளது. நிகழ்ச்சி முடிய ஒன்றரை வாரங்களே உள்ளதால், போட்டி தீவிரமடைந்துள்ளது.

தற்போது அரோரா, சான்ட்ரா, திவ்யா கணேசன், விக்கல்ஸ் விக்ரம், சபரிநாதன், கானா வினோத் ஆகியோர் இறுதிப் போட்டியாளர்களாக உள்ளனர். இதில், அரோரா நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் யாரேனும் நிகழ்ச்சியில் தொடர விருப்பம் இல்லை என்றால், பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறலாம். எஞ்சிய 5 பேரில் ஒருவர் வெற்றியாளராகத் தேர்வு செய்யப்படுவார்.

இந்நிலையில், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முன்னாள் போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகைப்புரிந்துள்ளனர். வியானா, பிரவீன் காந்தி, வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததைத் தொடர்ந்து பிரவீன்ராஜ் தேவசகாயமும் பிக் பாஸில் நுழைந்துள்ளார்.

பிரவீன்ராஜை சக போட்டியாளர்கள் உற்சாகமாக வரவேற்றனர். வெளியே நடந்த நிகழ்வுகள் குறித்து மேலோட்டமாக கேட்டறிந்தனர். அப்போது பிரவீன்ராஜ் குறித்து கேட்டபோது, பாபி சிம்ஹாவின் 25வது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் கூறினார். தனது நடிப்புத் திறமையைக் கண்டு கூடுதலாக காட்சிகள் எழுதப்பட்டு நடித்து வருவதாகக் குறிப்பிட்டார். இதுமட்டுமின்றி மற்றொரு தெலுங்கு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் கூறினார்.

பிக் பாஸ் கூறியதைப்போல வெளியுலகில் ஆரோக்கியமான மற்றும் நேரமறையான வாழ்க்கை அமைந்துள்ளதாகவும் பிரவீன்ராஜ் குறிப்பிட்டார்.

Bigg Boss 9 tamil Praveenraj devasagayam act in movies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் பலி: மத்திய உள்துறை அமைச்சகம், தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு!

கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பு!

ஆஸ்கர் 2026: சிறந்த படத்துக்கான பட்டியலில் தேர்வான டூரிஸ்ட் ஃபேமலி!

அரசின் 50 வகையான சான்றிதழ்களை வாட்ஸ்ஆப் வழியாக பெறலாம்! எப்படி?

ரயில்வே வேலைக்கு நிலம்: லாலு உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT