பிரவீன் காந்தி  படம் - எக்ஸ்
செய்திகள்

பிரஷாந்த் உடன் ஜோடி -2 படம்! பிக் பாஸ் வீட்டில் உறுதிப்படுத்திய பிரவீன் காந்தி!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக பிரவீன் காந்தி தெரிவித்துள்ளது குறித்து

தினமணி செய்திச் சேவை

நடிகர் பிரஷாந்த் உடன் ஜோடி -2 திரைப்படத்தில் இணைந்துள்ளதாக இயக்குநர் பிரவீன் காந்தி தெரிவித்துள்ளார்.

முதலில் நாகர்ஜுனாவுடன் ரட்சகன் -2 எடுக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், அவரிம் பேசுவதற்கான வாய்ப்புகள் கிடைக்காததால், பிரஷாந்த் உடன் புதிய படத்தில் பிரவீன் காந்தி இணைந்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 14 வது வாரத்தை எட்டியுள்ளது. இது இறுதி வாரம் என்பதால், இந்த வார முடிவில் பிக் பாஸ் சீசன் 9 வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும்.

கானா வினோத், சபரிநாதன், விக்கல்ஸ் விக்ரம், சான்ட்ரா, திவ்யா கணேசன், அரோரா ஆகியோர் இறுதிப் போட்டியாளர்களாக இருந்தனர். இதில், பணப்பெட்டியில் உள்ள ரூ. 18 லட்சமே போதும் என்று அப்பெட்டியை எடுத்துக்கொண்டு கானா வினோத், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து இந்த வாரத்தில் குறைந்த வாக்குகளைப் பெற்றதாக சாண்ட்ரா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாகத் தெரிகிறது. இந்த எபிஸோட் இன்று இரவு ஒளிபரப்பாகும்.

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் அரோரா, திவ்யா கணேசன், சபரிநாதன், விக்கல்ஸ் விக்ரம் என நான்கு பேரே எஞ்சியுள்ளனர். இவர்கள் 4 பேருக்கும் மக்கள் வாக்களிப்பார்கள். அதிக வாக்குகளைப் பெறும் நபர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

முன்னதாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் முதல் வாரத்தில் குறைந்த வாக்குகளைப் பெற்றதாக வெளியேறிய பிரவீன் காந்தி, மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வருகைப் புரிந்துள்ளார்.

வார இறுதி நாளில் விஜய் சேதுபதியிடம் பேசிய பிரவீன் காந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தனது வாழ்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்துப் பேசினார்.

விஜய் சேதுபதியிடம் பிரவீன் காந்தி பேசியதாவது:

நடிகர் பிரஷாந்த் உடன் ஜோடி 2 படத்தின் இணைந்துள்ளேன். முன்பு நாகர்ஜுனாவை வைத்து ரட்சகன் -2 எடுக்க முயற்சித்தேன். அது தற்சயமத்திற்கு முடியவில்லை. அதனால் பிரஷாந்த்தை வைத்து ஜோடி-2 எடுக்கவுள்ளேன். அது உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னர், மற்றொரு இயக்குநர் ஒத்த செருப்பு போன்று தனியொரு நபரை மையப்படுத்திய கதையைக் கூறியுள்ளார். அதில் நடிக்கவுள்ளேன். இவை இரண்டும் வெற்றி பெற்று ஓர் அங்கீகாரம் கிடைக்குமாயின், அது பிக் பாஸுக்கும் விஜய் சேதுபதிக்குமே சேரும் எனக் குறிப்பிட்டார்.

பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களும், விஜய் சேதுபதியும் பிரவீன் காந்தியின் முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Bigg BossTamil 9 Jodi 2 Project with Top Star Prasanth says Praveen gandhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காா்-பைக் மோதல்: பொறியியல் மாணவா்கள் இருவா் மரணம்

வாா்டரை தாக்கிய மத்திய சிறை கைதி மீது வழக்கு

வீழ்ச்சியடைந்து வரும் போகி மேளம் விற்பனை, வியாபாரிகள் கவலை!

12.1.1976: த.நா. முழுவதும் கார்டுக்கு 25 கிலோ கூடுதல் அரிசி சப்ளை - பொங்கலை முன்னிட்டு அரசு நடவடிக்கை: அதிகாரி தகவல்

ஷாலிமாா் பாக் பெண் கொலை வழக்கில் இதுவரை கைது செய்யப்படவில்லை; துப்பாக்கிச் சூடு நடத்தியவா் சிசிடிவியில் சிக்கியுள்ளதாக தகவல்!

SCROLL FOR NEXT