என்னைத் தாலாட்டும்... வைரலான விஜய்!
உன்னை நினைத்து திரைப்படத்தில் விஜய்....
உன்னை நினைத்து திரைப்படத்தில் முதலில் நடித்த விஜய்யின் பாடல் காட்சியை இயக்குநர் விக்ரமன் பகிர்ந்துள்ளார்.
நடிகர் விஜய்யின் இறுதி திரைப்படமான ஜன நாயகன் வெளியீட்டை முன்னிட்டு இயக்குநர் விக்ரமன் காணொளி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அதில், விக்ரமன் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, ஸ்னேகா, லைலா நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான உன்னை நினைத்து திரைப்படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் விஜய் என்றும் அவரை வைத்து எடுக்கப்பட்ட, ‘என்னைத் தாலாட்டும்’ பாடலின் சில காட்சிகளை இணைத்துள்ளதாக விக்ரமன் அப்பாடலின் விடியோ வடிவத்தை வெளியிட்டார்.
Advertisement
Advertisement
இதுவரை, சூர்யாவையும் லைலாவையும் மட்டுமே அப்பாடலில் பார்த்த ரசிகர்கள் முதல் முறையாக விஜய்யைப் பார்த்து ஆச்சரியத்துடன் அதனைப் பகிர்ந்து வருகின்றனர்.
ஏதோ சில காரணங்களால் உன்னை நினைத்து திரைப்படத்திலிருந்து விஜய் விலகினாலும், இப்பாடலின் விஜய் வடிவம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.