நடிகர் ரவி மோகன் ஜன நாயகன் திரைப்படம் வெளியாகாததைக் குறித்து பதிவிட்டுள்ளார்.
விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் பொங்கல் வெளியீடாக ஜன. 9 ஆம் திரைக்கு வர இருந்தது. ஆனால், இறுதி நேரத்தில் தணிக்கை சான்றிதழ் கிடைகாததால் படத்தின் வெளியீட்டுத் தேதியை ஒத்திவைப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
இதனால், விஜய்யின் கடைசித் திரைப்படமான ஜன நாயகன் பண்டிகை வெளியீட்டிலிருந்து விலகியது அவரின் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நடிகர் ரவி மோகன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இதயம் நொறுங்கியது. விஜய்யண்ணா... உங்களின் லட்சக்கணக்கான சகோதரர்களில் ஒருவனாக நானும் துணை நிற்கிறேன். உங்களுக்கு எந்த தேதியும் தேவையில்லை. நீங்கள்தான் தொடக்கம். தேதி எதுவாக இருந்தாலும், படம் வெளியாகும் நாள்தான் பொங்கல்” எனத் தெரிவித்துள்ளார்.
தணிக்கை வாரியம் தொடர்பாக திரைத்துறையிலிருக்கும் பல பிரபலங்கள் மௌனம் காத்துவரும் சூழலில் ரவி மோகனின் இப்பதிவு விஜய் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.