பராசக்தி படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
பராசக்தி படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு இருப்பது தொடர்பாக...
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள பராசக்தி படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இயக்குநர் சுதா கொங்கரா - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படம் பொங்கல் வெளியீடாக ஜன. 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
மொழிப்போர் காலங்களில் மதராஸ் மாகாணத்தில் நடைபெற்ற ஹிந்தித் திணிப்பு போராட்டத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.
பராசக்தி படத்தில் பல்வேறு காட்சிகளுக்கு தணிக்கை குழு ஆட்சேபனை கூறியிருந்த நிலையில், சான்றிதழ் கிடைக்காமல் இருந்து வந்தது.
தணிக்கை குழுவின் ஆட்சேபனைக்கு உரிய காட்சிகளில் திருத்தம் செய்யப்பட்ட நிலையில், பராசக்தி படத்துக்கு யு/ஏ சான்றிதழை தணிக்கை வாரியம் வழங்கியுள்ளது. இதனை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸும் உறுதி செய்துள்ளது.
இதனால், பராசக்தி வெளியீடு தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், திட்டமிட்டப்படி நாளை வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.