2026 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டியில், தமிழ்த் திரைப்படமான “கெவி” இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரையுலகின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகளின் 98 ஆவது விழா வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. இந்த விருதுகளைப் பெறுவதற்குப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் போட்டியிடுகின்றன.
இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கத்தில் 2025 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் “கெவி”. நடிகர்கள் ஆதவன், ஷீலா, விஜே ஜாக்குலின் லிடியா, ஜீவ சுப்ரமணியன், பி. கணேஷ், விவேக் மோகன் மற்றும் உமர் ஃபாருக் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள கொடைக்கானல் பகுதியில் நடைபெறும் கதைக்களத்துடன் உருவாக்கப்பட்ட இந்தப் படம் 98 ஆவது ஆஸ்கர் விருது போட்டியில் இடம்பெற தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, இயக்குநர் நீரஜ் கைவானின் “ஹோம்பவுண்ட்” எனும் இந்தியத் திரைப்படம் ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் அதிகாரப்பூர்வமாகத் தேர்வாகியுள்ளது. இதையடுத்து, இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகும் திரைப்படங்களின் பட்டியல் வரும் ஜன.22 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.