நடிகர் அஜித் குமாரை இசையமைப்பாளர் அனிருத் சந்தித்துள்ளார்.
நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தைத் தொடர்ந்து கார் பந்தயங்களில் கலந்துகொண்டு கவனம் ஈர்த்து வருகிறார். இறுதியாக, மலேசியாவில் தன் குழுவினருடன் போட்டியில் கலந்துகொண்டார்.
தற்போது, துபையில் நடைபெறும் புதிய கார் பந்தயத்திற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், அங்கு வைத்து அஜித் குமாரை இசையமைப்பாளர் அனிருத் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இதனால், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அஜித்தின் 64-வது திரைப்படத்தில் அனிருத் இசையமைப்பாளராக இருக்கலாம் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.