பிக் பாஸ் போட்டியாளர்கள் படம்: ஹாட் ஸ்டார்/யூடியூப்
செய்திகள்

பிக் பாஸ் 9: இறுதி வாரத்துக்கு முன்னேறிய 4 போட்டியாளர்கள்! வெளியேறியது யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரத்துக்கு முன்னேறிய 4 போட்டியாளர் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரத்துக்கு முன்னேறிய 4 போட்டியாளர்கள் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 15 வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.

அரோரா நேரடியாக இறுதி வாரத்துக்கு செல்வதற்கான (Ticket To Final) டிக்கெட்டை பெற்றதால், இந்த வாரம் நாமினேஷனுக்கு பிக் பாஸ் வீட்டில் உள்ள கானா வினோத், திவ்யா கணேஷ், சபரிநாதன், சான்ட்ரா, விக்கல்ஸ் விக்ரம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதனிடையே, பாடகர் கானா வினோத் ரூ. 18 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். கானா வினோத் போட்டியிலிருந்து வெளியேறியதால், திவ்யா கணேஷ், சபரிநாதன், சான்ட்ரா, விக்கல்ஸ் விக்ரம் ஆகிய நான்கு பேர் நானினேஷனில் இருந்தனர்.

இதில் குறைந்த வாக்குகளைப் பெற்ற சான்ட்ரா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.

இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து நந்தினி, இயக்குநர் பிரவீன் காந்தி, திருநங்கை அப்சரா, கலையரசன், பிரவீன், துஷார், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், கெமி, ப்ரஜின், ரம்யா ஜோ, வியானா, எஃப்ஜே, ஆதிரை, கனி திரு, அமித் பார்கவ், கமருதீன், விஜே பார்வதி, சுபிக்‌ஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 15வது வாரமான இறுதி வாரத்துக்கு திவ்யா கணேஷ், சபரிநாதன், அரோரா, விக்கல்ஸ் விக்ரம் ஆகிய நால்வர் தேர்வாகியுள்ளனர்.

இவர்களில் ஒருவர், பிக் பாஸ் சீசன் 9ன் வெற்றியாளராக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார். பிக் பாஸ் வெற்றியாளருக்கு கோப்பையுடன் ரூ. 50 லட்சம் வழங்கப்படும். கோப்பையை யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

போட்டியிலிருந்து வெளியேறிய வியானா, பிரவீன்ராஜ் தேவசகாயம், பிரவீன் காந்தி, திவாகர், கெமி, அப்சரா உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பிக் பாஸ் விட்டுக்குள் மீண்டும் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Information has been revealed regarding the 4 contestants who have advanced to the final week of the Bigg Boss show.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புயல் பாதித்த இலங்கையில் இந்திய நிதியில் அமைக்கப்பட்ட முதல் பெய்லி பாலம் திறப்பு!

அமெரிக்காவில் டிரம்ப் அரசுக்கு எதிராக தீவிர போராட்டம்! பெண் சுட்டுக் கொலை எதிரொலி!

கைப்பந்து, கபடிப் போட்டி

ஆக்லாந்து ஓபன் டென்னிஸ்: ஸ்விட்டோலினா சாம்பியன்

சூறைக்காற்றுடன் பலத்த மழை: மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை

SCROLL FOR NEXT