நடிகர் சூர்யா எப்போதும் தனக்குத் துணையாக நிற்பதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
நடிகர் கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான வா வாத்தியார் திரைப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். கடந்தாண்டே வெளியாக வேண்டிய படம் தயாரிப்பாளர் சந்தித்த நிதி வழக்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது, பொங்கல் வெளியீடாக வருகிற ஜன. 14 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் வெளியீட்டு நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, “சில திரைப்படங்கள் சரியாகப் போகாததால் என்னைக் குறித்து நிறைய எதிர்மறையான விஷத்தன்மை வாய்ந்த விஷயங்கள் பகிரப்பட்டன. குறிப்பாக, நான் பெரிய கடனாளியாகிவிட்டதாக பல யூடியூபர்கள் கூறினார்கள். ஆனால், தமிழ் சினிமாவிலேயே கடன் இல்லாத தயாரிப்பாளர் நானாகத்தான் இருப்பேன்.
மேடையில் அண்ணன், தம்பி மாதிரி என பேசுபவர்கள் பின்னாட்களில் விலகிச்செல்வது போல் இல்லாமல் இந்த இக்கட்டான காலகட்டங்களில் எனக்கு ஆதரவாக எப்போதும் சூர்யா துணையாக நின்றார். அவருக்கு என் நன்றிகள் ” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.