ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
மலைவாழ் மக்களின் உணர்வுகளை மையப்படுத்தி தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் விமல், ஸ்ருஷ்டி டாங்கே பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் மகாசேனா.
இந்தத் திரைப்படம் ஆஹா ஓடிடியில் தற்போது காணக் கிடைக்கிறது.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் அபிராமி, ஜெகபதி பாபு, ஒய். ஜி. மகேந்திரா ஆகியோர் நடித்துள்ள அனந்தா திரைப்படம், சாய்பாபாவைப் பற்றிய ஆன்மிகப் படமாக எடுக்கப்பட்டுள்ளது.
நேரடியாக ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் அனந்தா திரைப்படம் வெளியாகியுள்ளது.
ஜோஷ் இயக்கத்தில் விஜயராகவன், சலீம் குமார், கனி குஸ்ருதி, மீரா வாசுதேவ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மலையாள மொழிப்படமான கிர்க்கன், சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை (ஜன. 15) வெளியாகிறது.
உண்மைச் சம்பவத்தை வைத்து கிரைம் கலந்த திரில்லர் பாணியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் இயக்குநர் ஜிதின் கே.ஜோஷ் இயக்கத்தில் கடந்த டிச.5 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியான திரைப்படம் களம்காவல்.
இந்தப் படத்தில் விநாயகன், மம்மூட்டி பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் சோனி லைவ் ஓடிடியில் வரும் ஜன. 16-ல் வெளியாகிறது.
தன்ஞ்சய் சங்கர் இயக்கத்தில் மோகன்லால், திலீப், சாண்டி மாஸ்டர், எஸ்.ஜே. சூர்யா, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மலையாள மொழித்திரைப்படம் பா பா பா.
இந்தப் படம் வரும் ஜன. 16 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் பிரபலம் பூர்ணிமா ரவி பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் 'யெல்லோ'.
காதல் கலந்த நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகம் நாயகனாக நடித்துள்ள பல்டி படத்தை, அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்கலாம்.
இப்படத்தில், குமார் என்கிற பிரதான பாத்திரத்தில் கபடி வீரராக நடிகர் சாந்தனு நடித்துள்ளார். கேங்ஸ்டர் கதாபாத்திரங்களில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
நடிகர் கவின், ஆண்ட்ரியா நடிப்பில் உருவான மாஸ்க் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விக்ரணன் அசோக் இயக்கியிருந்தார்.
நடுத்தர குடும்பத்தினர்களின் வலிகளைச் சொன்ன படமாக உருவானாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இப்படத்தை ஜீ5 ஓடிடியில் காணலாம்.
நடிகர் பாலகிருஷ்ணா - இயக்குநர் போயபடி ஸ்ரீனு கூட்டணியில் உருவான அகாண்டா 2: தாண்டவம் திரைப்படம் டிச.12 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நாளை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாள, கன்னட மொழிகளில் காணக் கிடைக்கிறது.
இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய 'கோடித்துணி' என்கிற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் 'அங்கம்மாள்'.
மறைந்த பிரபல இயக்குநரான கே. பாலச்சந்தரின் மருமகளான நடிகை கீதா கைலாசம் இப்படத்தில் அங்கம்மாளாக நடித்திருக்கிறார். இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.