இயக்குநர் சுதா கொங்கராவின் கருத்து இணையத்தில் வைரலாகியுள்ளது.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கிய பராசக்தி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ. 70 கோடி வரை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேநேரம், இப்படம் குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவான கருத்துகளை முன்வைப்பதாக விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து சில ரசிகர்கள் பராசக்தியைக் கடுமையான விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த சமூக வலைதள விமர்சனங்கள் குறித்து பேசிய சுதா கொங்கரா, “ஒரு திரைப்படத்திற்கு எதிராக கருத்து சொல்பவர்கள் போலி ஐடிகளில் ஒளிந்துகொண்டு தாக்குதல் நடத்துகின்றனர். இதனை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
பராசக்திக்கு எதிராக தொடர்ந்து பரவும் எதிர்மறையான விஷயங்களுக்கு பின்னால் அரசியல் இல்லை. இத்தாக்குதலை நடத்துவது பொங்கல் வெளியீட்டிற்கு வராத ஒரு நடிகரின் ரசிகர்கள்தான். இந்த ரௌடிகள், குண்டர்களுக்கு எதிராக போராட வேண்டியுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.
ரௌடிகள் என சுதா கொங்கரா குறிப்பிட்டது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அந்த ரசிகர்கள் மேலும் பராசக்தி திரைப்படத்தைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
sudha kongara on parasakthi social media backlash
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.