விஜய்யின் தெறி படத்தின் மறுவெளியீட்டுத் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் தெறி, ஜனவரி 23 ஆம் தேதியில் ரீ-ரிலீஸ் செய்யப்படவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
அஜித்தின் மங்காத்தாவும் அதே நாளில் ரீ-ரிலீஸுக்கு வரவிருப்பதால், ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
திரைத் துறையில் இருந்து விஜய் ஓய்வுபெறவுள்ள நிலையில், அஜித்தின் மங்காத்தாவும் விஜய்யின் தெறியும் ஒரே நாளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பொங்கல் விடுமுறையில் விஜய்யின் ஜன நாயகன் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதால், தெறி படத்தை ரீ-ரிலீஸ் செய்யவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. இருப்பினும், புது திரைப்படங்களின் தயாரிப்பாளர்களின் கோரிக்கைக்கு இணங்க, தெறியின் மறுவெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.