ஜன நாயகன் திரைப்பட வழக்கால் பிப்ரவரி மாதத்தில் வெளியீட்டை அறிவித்த திரைப்படங்களின் வெளியீடுகள் கேள்விக்குறியாகியுள்ளது.
தவெக தலைவரும், நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்று வழங்க தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இம்மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாத துவக்கத்தில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டால் தேர்தல் தேதி அறிவிப்பைக் கருத்தில் கொண்டு உடனடியாக ஜன நாயகனைத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிடலாம்.
ஒருவேளை ஜன நாயகன் பிப். வெளியீடாக வந்தால், பிப்ரவரி வெளீடாகத் திரைக்கு வரவுள்ள அபிஷன் ஜீவிந்த்தின் வித் லவ் (பிப். 6) கென் கருணாஸின் யூத், பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே, ராதிகா நடித்த தாய்க்கிழவி ஆகிய திரைப்படங்களின் வெளியீட்டில் மாற்றம் ஏற்படலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.