இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடிக்கும் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
துல்கர் சல்மான் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு பாதயாத்ரா (பாதயாத்திரை) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
கலைப்படங்களை இயக்கி இந்தியளவில் பிரபலமானவர் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன். இவர் இயக்கிய படங்களில் அனந்தரம், மதிலுகள், விதேயன் ஆகிய திரைப்படங்களில் நடிகர் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்ற அடூர் கோபாலகிருஷ்ணன் இறுதியாக 2016-ல் பின்னேயும் என்கிற மலையாள திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
இவர்கள் 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்துள்ளது சினிமா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் திரையரங்குகளில் ஹிட் அடித்த மமூட்டியின் களம்காவல் ஜியோ ஸ்டார் ஓடிடியில் வெளியானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.