நடிகர் அதர்வா நாயகனாக நடிக்கும் “இதயம் முரளி” திரைப்படத்தின் 2 ஆவது பாடல் வெளியாகியுள்ளது.
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் “இதயம் முரளி” எனும் புதிய திரைப்படத்தில் நடிகர் அதர்வா நாயகனாக நடிக்கின்றார்.
நடிகர்கள் பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர், ரக்ஷன், டிராவிட் செல்வம், நிஹாரிகா, ஏஞ்சலீன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை “டான் பிக்சர்ஸ்” நிறுவனம் தயாரித்துள்ளது.
வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள இந்தப் படத்தில், இசையமைப்பாளர் தமன் இசையமைத்ததுடன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், “இதயம் முரளி” திரைப்படத்தின் 2 ஆவது பாடலான “தங்கமே தங்கமே” இன்று (ஜன. 28) படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, அதர்வாவின் தந்தையான மறைந்த பிரபல நடிகர் முரளி ரசிகர்களால் இதயம் முரளி என அழைக்கப்பட்டு வந்த நிலையில், அந்தப் பெயரையே இப்படத்திற்கு சூட்டியுள்ளது பெரியளவில் கவனம் ஈர்த்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.