இயக்குநர் அபிஷன் ஜீவிந் நாயகனாக நடிக்கும் “வித் லவ்” திரைப்படத்திற்கு சென்னை மெட்ரோ ரயிலில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
நடிகர் சசிகுமார் நாயகனாக நடித்து வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” எனும் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ராஜ் ஆகியோரின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் உருவாகும் “வித் லவ்” எனும் திரைப்படத்தின் மூலம் அபிஷன் ஜீவிந் நாயகனாக அறிமுகமாகின்றார்.
இசையமைப்பாளர் சான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்தில் நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக நடிக்கின்றார்.
”வித் லவ்” திரைப்படம் வரும் பிப்.6 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகின்றது. இதையடுத்து, சென்னை மெட்ரோ ரயில் மற்றும் நிலையங்களில் “வித் லவ்” படத்திற்கு விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.
முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமே பெரும்பாலும் மெட்ரோ ரயில்களின் மூலம் விளம்பரப்படுத்தப்பட்ட நிலையில், அறிமுக நடிகர் ஒருவரின் திரைப்பட விளம்பரம் இடம்பெற்றுள்ளது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.