இந்தியாவிலேயே ரூ. 1000 கோடி வசூலித்த துரந்தர் தி ரிவென்ஞ்!
துரந்தர் தி ரிவென்ஞ் குறித்து...
துரந்தர் தி ரிவென்ஞ் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான துரந்தர், துரந்தர் தி ரிவென்ஞ் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.
இதில் முதல் பாகம் ரூ. 1400 கோடி வரை வசூலித்து வெற்றிப்படமானது. கடந்த மார்ச் 19 ஆம் தேதி வெளியான துரந்தர் இரண்டாம் பாகமான ரிவென்ஞ்-ம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெற்று மிக விரைவாகவே ஆயிரம் கோடியை வசூலித்து அசத்தியது.
தற்போது, உலகளவில் ரூ. 1365 கோடியும், இந்தியாவில் ரூ. 1023 கோடியையும் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெறும் 11 நாள்களிலேயே துரந்தர் முதல் பாகத்தின் மொத்த வாழ்நாள் வசூலையும் முறியடித்து, உலகளாவிய வணிகத்தில் தனது அசாதாரண ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ளது.
summary