நடிகை சாவித்திரியின் வாழ்க்கைத் தழுவலாக உருவாகி வரும் படம் "நடிகையர் திலகம்.' கீர்த்தி சுரேஷ் சாவித்திரி கதாபாத்திரத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்ற நிபந்தனையை முதலில் ஏற்றுக் கொண்ட கீர்த்தி சுரேஷ், இப்போது அதிலிருந்து பின் வாங்குவதாகத் தெரிகிறது. ஆனாலும், இவரை விட்டால் வேறு வழியில்லை என்பதால் படப்பிடிப்பைத் தொடங்கி விட்டனர். இந்நிலையில் சாவித்திரி வேடத்தில் இருக்கும் கீர்த்தியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. அதற்கு கருத்து தெரிவித்த பலர், "இவரா சாவித்திரி' என்பது போல் கிண்டலடிக்கத் தொடங்கி விட்டனர். இதனால் கீர்த்தி சுரேஷை கிராபிக்ஸ் மூலம் குண்டாகக் காட்டுவது என்று இயக்குநர் நாக் அஸ்வின் முடிவெடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.