நியூஸ் ரீல்

ஏ.ஆர். ரஹ்மானின் ஒன் ஹார்ட்

DIN

ஹாலிவுட்டில் மைக்கேல் ஜாக்சனின் இசை நிகழ்ச்சி "தி இஸ் இட்' என்ற பெயரில் திரைப்படமாக வெளியானது. அதைப் போன்று இந்தியாவில் முதன் முறையாக ஏ.ஆர். ரஹ்மானின் இசைச் சுற்றுப் பயணம் திரைப்படமாக வெளியாகவுள்ளது. அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் நடந்த இசைப் பயணத்தின் முழுமையான தொகுப்பு இது. ஒய்.எஃப் மூவீஸ் நிறுவனத்துடன் இணைந்து கிரேப் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு "ஒன் ஹார்ட்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி இப்படம் கனடா, டோரண்டோவில் உள்ள ஸ்காட்டியா பேங்க் திரையரங்கில் முதன் முறையாக திரையிடப்பட்டது. இதையடுத்து தற்போது இந்தியாவில் இது வெளியாகிறது. அமெரிக்காவின் 14 நகரங்களில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் இசைச் சுற்றுபயணம், இசை நிகழ்ச்சி, இசை ஒத்திகை மற்றும் பிரத்யேக பேட்டிகள் ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன. திரை இசைப் பயணத்தில் ரஹ்மானுக்கு இது 25-ஆம் ஆண்டு என்பதால், இப்படம் இந்தியாவில் திரையிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

SCROLL FOR NEXT