நியூஸ் ரீல்

பணம் சேமிக்கவே ஆசை! திருமணத்தில் விருப்பமில்லை! நடிகை மல்லிகா ஷராவத் பேட்டி!

மன் மார்ஸியான்' என்ற படத்தில் உங்களுக்கு வித்தியாசமாக பாங்ரா நடனத்தை ஆடும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளோம்.

DIN

மன் மார்ஸியான்' என்ற படத்தில் உங்களுக்கு வித்தியாசமாக பாங்ரா நடனத்தை ஆடும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளோம். இதை உங்களுக்கு பயிற்சியளிக்கப் போகிறவர்கள் தமிழ் திரையுலகை சேர்ந்த நடன இயக்குநர்கள்'' என்று இப்படத்தின் இயக்குநர் அனுராக் காஷ்யப் கூறியபோது, வேடிக்கைக்காக சொல்கிறார் என்று நினைத்தேன். பின்னர், தமிழ் திரையுலக ஸ்டண்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமாரின் மகள்கள் நவதேவி மற்றும் நவலட்சுமி ஆகியோர் வந்து எனக்கு பாங்ரா நடன பயிற்சியளித்து ஆடவைத்தபோது ஆச்சரியமாக இருந்தது'என்று கூறும் தாப்ஸி பன்னு நடித்த 'மன்மார்ஸியான்' சமீபத்தில் திரைக்கு வந்துள்ளது.

**

'என்னுடைய மாநிலமான ஹரியானாவில் பெரும்பாலான பெண்கள் வாழ்க்கையில் சொந்தமாக பணம் சேர்க்க முடியாது. கூண்டில் அடைக்கப்பட்ட வாழ்க்கைதான் அவர்களுடையது. என்னைப் போன்று வெளியே வருபவர்களால் தான் பணம் சேமிக்க முடியும். என்னைப் பொருத்தவரை நான் தனித்து பணம் சேமிக்க வேண்டுமென்பது என் குறிக்கோளாகும். எனக்கு திருமணத்திலும் விருப்பமில்லை. யாரையாவது காதலிக்கும் போது அவரை கணவராக ஏற்றுக் கொள்வேன். இந்த உறவு என் வாழ்க்கையில் தனிபட்ட விஷயமாகும். நான் தேர்ந்தெடுப்பவை, செய்பவை அனைத்தும் கணவர் பெருமைபடும்படியாகவே இருக்கும்' என்கிறார் மல்லிகா ஷராவத்.

**

மிஸ்கின் இயக்கத்தில் 'முகமூடி' படத்தில் ஜீவாவுடன் நடித்த பூஜா ஹெக்டே தற்போது 3 தெலுங்கு படங்கள், 1 ஹிந்திப் படம் என நடித்து வருகிறார். ரண்பீர் கபூருடன் இணைந்து நடித்த விளம்பரப்படம் மூலம் திரைக்கு வந்த இவரது பல படங்கள் தோல்வியடைந்துள்ளன. "என்னுடைய குடும்பம் திரையுலகத்துடன் தொடர்பு கொண்டதல்ல. திரையுலகை பொருத்தவரை நான் இன்னும் மாணவிதான். தோல்விதான் நல்ல படங்களை தேர்வு செய்ய உதவுகிறது. 'பாகுபலி' பிரபாஸுடன் இப்போது நான் நடித்து வரும் படத்தின் கதை என் ஆவலை பூர்த்தி செய்யும் விதத்தில் உள்ளது' என்கிறார் பூஜா ஹெக்டே

**

'படைவீரன்' படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்த அம்ரிதா ஐயருக்கு மீண்டும் கிராமத்துப் பெண்ணாக கன்னடத்தில் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் பேரன் வினய் ராஜ்குமாருடன் நடிக்கும் வாய்ப்பு ராமயணா என்ற படத்தில் கிடைத்துள்ளது. இதன் படப்பிடிப்பு ராஜ்குமார் பிறந்த ஊரான கஜனூரில் நடப்பது விசேஷமாகும். அம்ரிதா ஐயர் தமிழ் பெண்ணாக இருந்தாலும், முதல் நாள் படப்பிடிப்பின் போது படத்தின் இயக்குநர் தேவனூர் சந்துருவிடமும், வினய் ராஜ்குமாரின் தந்தை ராகவேந்திராவிடமும் கன்னடத்தில் பேசி அசத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT