நியூஸ் ரீல்

ஹிந்தி படத்தில் நடிக்கிறார் ஜீவா!

பாலிவுட் செல்கிறார் ஜீவா... பிரபல தயாரிப்பாளரான ஆர்.பி.சௌத்ரியின் மகன் ஜீவாவுக்கு தமிழ் சினிமாவில் தனி இடம் உண்டு.

DIN


பாலிவுட் செல்கிறார் ஜீவா... பிரபல தயாரிப்பாளரான ஆர்.பி.சௌத்ரியின் மகன் ஜீவாவுக்கு தமிழ் சினிமாவில் தனி இடம் உண்டு. தேர்ந்த கதைகளால் நல்ல நடிகர் என பெயர் பெற்றவர், தற்போது ராஜூமுருகன் இயக்கி வரும் 'ஜிப்ஸி' படத்தில் நடிக்கிறார். இதையடுத்து கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகவுள்ள ஹிந்தி படத்தில் நடிக்கிறார். 1983-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட்டை மையமாக வைத்து '1983 வேர்ல்ட் கப்' என்ற ஹிந்திப் படம் தயாராகிறது. உலகக்கோப்பையை வென்று இந்தியாவுக்கு எப்படி பெருமை தேடிக் கொடுத்தது இந்திய கிரிக்கெட் அணி என்பதுதான் இந்தப் படத்தின் சாரம்சம்.

பிர் கான் இயக்கும் இந்தப் படத்தில், அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த கபில் தேவ் கதாபாத்திரத்தில், ரன்வீர் சிங் நடிக்கிறார். அவருடைய பயிற்சியாளராக நவாஸுதீன் சித்திக் நடிக்கிறார். மே மாதம் லண்டனில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்தநிலையில், அந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜீவா. இதுதான் ஜீவா அறிமுகமாகும் இந்திப் படம். இதில், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பிரபல வேகப்பந்து வீச்சாளரான சாந்து, ஜீவாவுக்கு பிரத்யேக பயிற்சிகளை அளிக்கிறார். ஜீவா நடிப்பில் "கொரில்லா' மற்றும் 'ஜிப்ஸி' ஆகிய படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகி வருகின்றன. மேலும், அருள்நிதியுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பியூன் வேலை: பிஎச்டி, எம்பிஏ உள்பட 24.76 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பம்!

கோவை: கிணத்தைக் காணோம் வடிவேலு காமெடி பாணியில் இல்லாத வீட்டுக்கு வரி!

துல்கர் சல்மான் - 41 படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்!

வரம் நீ... அர்ச்சனா கௌதம்

SCROLL FOR NEXT