சென்னையின் அன்னபூரணிகளே! தினமணி இணையதளத்தின் பிரம்மாண்ட சமையல் போட்டி 2018 ‘சென்னையின் சமையல் ராணி’யில் கலந்து கொள்ள இப்போதிருந்தே உங்களது சமையல் ஆர்வத்தை பட்டை தீட்டத் தொடங்கி இருப்பீர்கள்.
சமையல் போட்டி நடைபெறும் நாள் : செப்டம்பர் 1, சனிக்கிழமை.
நேரம்: காலை 9 மணி முதல் 5 மணி வரை
இடம்: எம் ஓ பி வைஷ்ணவ மகளிர் கல்லூரி, நுங்கம்பாக்கம், சென்னை.
போட்டிக்கான விதிமுறைகள்:
சென்னையின் சமையல்ராணி போட்டியில் கலந்து கொள்ளப் பதிவு செய்துள்ளவர்கள் கீழுள்ள விதிமுறைகளைப் பின்பற்றவும்.
மெனு: சைவம் மட்டும். (இரண்டு பேருக்குப் போதுமான அளவு சமைத்தால் போதும்)
சமையல் வகைகள்:
சமையல் போட்டிக்கான கால அளவு: 1 மணி நேரம்.
சென்னையின் சமையல்ராணி போட்டியின் நடுவர்கள்
‘நளமகாராணி’ என்று தமிழ்நாடு கொண்டாடும் மல்லிகா பத்ரிநாத், சென்னையின் பிரபல உணவியல் வல்லுனர்களில் ஒருவரான மீனாக்ஷி பெட்டுகோலா, சமையல் ஆர்வலர்கள் நன்கறிந்த ‘அறுசுவை அரசி’ ரேவதி மூவரும் தான் சென்னையின் சமையல் ராணி போட்டிக்கான நடுவர்களாகக் கலந்து கொண்டு சிறப்பிக்கவிருக்கிறார்கள்.
நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
நிகழ்ச்சியின் இறுதியில் வெற்றியாளர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
தினமணி இணையதளம் நடத்தும் இந்த பிரம்மாண்ட சமையல் போட்டிக்கான பரிசுகளும் பிரமாதமானவையாகவே இருக்கும்.
போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் வலது பக்கமுள்ள விண்ணப்ப படிவத்தில் பதிவு செய்து உங்களது பங்கேற்பை உறுதி செய்து கொள்ளவும்.
*சமையற்கலையில் ஆர்வமுள்ள 50 வயதுக்குட்பட்ட அனைத்து பெண்களும் இப்போட்டியில் பங்கேற்கலாம்.
*ஆர்வமுள்ள பெண்கள் அனைவரையும் தினமணி இணையதளம் இருகரம் கூப்பி வரவேற்கிறது!
*பங்கேற்பீர்... பரிசுகளை வென்றிடுவீர்!
போட்டி குறித்த மேலதிகத் தகவல்களைப் பெற dinamani.readers@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தினமணி இணையதளம் நடத்தும் பிரம்மாண்ட சமையல் போட்டி 2018 ‘சென்னையின் சமையல் ராணி!
தினமணி இணையதளத்தின் மார்ச் மாதப்போட்டியில் பட்டுப் புடவை பரிசு பெறும் அதிர்ஷ்டசாலிகள்!
தினமணி இணையதளத்தின் மார்ச் மாதப் போட்டியில் 'பட்டுப்புடவை' பரிசு பெறப்போகும் அதிர்ஷ்டசாலி யார்?
தினமணி கொடுத்த பரிசுத் தொகையை வென்றவர்கள் இவர்கள்தான்!
தினமணி பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி இறுதிச் சுற்று வெற்றியாளர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.