தினமணி வாசகர் போட்டிகள்

தினமணி பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி இறுதிச் சுற்று வெற்றியாளர்கள்!

தினமணி, ஐநாக்ஸ் திரையரங்குடன் இணைந்து நடத்திய ‘பொங்கலோ பொங்கல்’ ரங்கோலி போட்டியின் இறுதிச் சுற்று வெற்றியாளர்கள் லிஸ்ட்...

கார்த்திகா வாசுதேவன்

தினமணி இணையதளம் , ஐநாக்ஸ் திரையரங்குடன் இணைந்து நடத்திய ‘பொங்கலோ பொங்கல்’ ரங்கோலி போட்டியின் இறுதிச் சுற்று இன்று சென்னை விருகம்பாக்கம் ஐநாக்ஸ் திரையரங்க வளாகத்தில் இனிதே நடந்து முடிந்தது.

இறுதிச் சுற்றுக்கென தேர்வான 10 போட்டியாளர்களும் மிகுந்த ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் மிக அருமையாகத் தயாராகி வந்திருந்தனர். அது மட்டுமல்ல, முதல் சுற்றுக்கென அனுப்பிய ரங்கோலிகளை விட மிக, மிக அற்புதமான ரங்கோலிகளைத் தந்து நடுவர் மற்றும் சிறப்பு விருந்தினராக வந்திருந்து நிகழ்ச்சியைக் கெளரவித்த விஜய்ஸ்ரீ கிருஷ்ணன் அவர்களை மனங்குளிரச்
செய்து விட்டனர். 

அனைத்து ரங்கோலிகளும் அழகாகவே இருந்தாலும் போட்டி என்றால் முதல் மூன்று இடங்களைத் தேர்ந்தெடுத்தாக வேண்டுமில்லையா?! ரங்கோலி போட்டியின் நடுவர்,  க்ரேயான்ஸ் நெட்வொர்க் விளம்பர நிறுவனத்தின் தென் பிராந்திய துணைத்தலைவர் தன்னுடைய 25 வருட விளம்பர உலக அனுபவத்தைக் கொண்டு நமது வாசகிகள் இட்ட ரங்கோலிகளில் அவர்கள் செலுத்திய ஈடுபாட்டையும் நேர்த்தியையும் கவனத்தில் கொண்டு இறுதியாக மூன்று பரிசுகள் அல்ல ஐந்து பரிசுகளை அறிவிக்கப் பரிந்துரைத்தார். 

அதன்படி முதல் 5 இடங்களுக்குத் தேர்வான வாசகிகள்...

முதல் பரிசு:

வனஜா ராதாகிருஷ்ணன்

பரிசுத் தொகை ரூ.5000

பரிசுக்குரிய ரங்கோலி...

இரண்டாம் பரிசு:

அனுராதா கமலக் கண்ணன்

பரிசுத்தொகை ரூ.3000

பரிசுக்குரிய ரங்கோலி...

மூன்றாம் பரிசு:

ஷாலினி முகுந்தன்

பரிசுத்தொகை ரூ.2000

பரிசுக்குரிய ரங்கோலி...

 நான்காம் பரிசு:

ரெமா ரமணி

பரிசுத் தொகை ரூ.1000

பரிசுக்குரிய ரங்கோலி...

ஐந்தாம் பரிசு

சந்திரா ரங்கராஜன்

பரிசுத்தொகை ரூ.1000

பரிசுக்குரிய ரங்கோலி...

பரிசு பெற்றவர்கள் தவிர, நிகழ்வில் கலந்து கொண்ட இறுதிச் சுற்றுப் போட்டியாளர்கள் அனைவருக்குமே தினமணியின் பிரத்யேகப் பரிசுகளும், ஐநாக்ஸ் திரையரங்கில் திரைப்படம் கண்டு மகிழ தலா இரண்டு திரைப்பட நுழைவுச் சீட்டுகள் மற்றும் சென்னை டயமண்ட்ஸில் வைர நகை வாங்க 9000 ரூ தள்ளுபடிக் கூப்பன்களும் வழங்கப்பட்டன.

இன்றைய நிகழ்வு இனிதே நடந்து முடிந்தது.

போட்டியில் வெற்றி பெற்றோர் மற்றும் கலந்து கொண்ட வாசகிகள், திரையரங்க வளாகத்தில் ரங்கோலிகளைக் கண்டுகளித்த திருவாளர் பொதுஜனங்கள் அனைவருக்கும் தினமணியின் மனம் நிறைந்த நன்றிகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT