தினமணி வாசகர் போட்டிகள்

‘உலக சுற்றுலா தினப்போட்டி’ வாசகர் தம் சுற்றுலா அனுபவங்களைப் பகிர அக்டோபர் 5 இறுதித் தேதி !

கார்த்திகா வாசுதேவன்

தினமணி இணையதளத்தின் சார்பில் ‘செப்டம்பர் 27 சர்வ தேச சுற்றுலா தினத்தை’ முன்னிட்டு ‘சுற்றுலா தினப் போட்டி’ ஒன்றை அறிவித்திருந்தோம். இந்தப் போட்டியின் வாயிலாக வாசகர்கள்  ‘உள்ளூர் முதல் உலகம் வரை வியாபித்துப் பரந்து விரியக்கூடியதான’ தங்களது சுற்றுலா அனுபவங்களை தினமணியுடனும் அதன் லட்சக்கணக்கான வாசகர்களுடனும் பகிர்ந்து கொள்ள இனியதொரு வாய்ப்பை தினமணி இணையதளம் ஏற்படுத்திக் கொடுக்க முனைந்திருக்கிறது.

போட்டிக்காக இதுவரை வந்து குவிந்திருக்கும் சுற்றுலா அனுபவக் கடிதங்களில் சிறந்த மூன்றை எப்படித் தேர்ந்தெடுப்பது என்று தெரியவில்லை...  ஏனெனில், ஒவ்வொரு வாசகரது சுற்றுலா அனுபவமும் அதை வாசிக்கக் கூடிய எவருக்கும் சுவாரஸ்யம் தரக்கூடியதாக மட்டுமன்றி, நாமும் இங்கெல்லாம் சுற்றுலா சென்றால் என்ன? முதலில் உள்ளூர்... உள்நாடு... அண்டை நாடு பிறகு உலகத்திலுள்ள அத்தனை இடங்களையும் வருடம் தோறும் முறை வைத்துச் சுற்றி வந்தால் என்ன? சும்மா கிணற்றுத் தவளைகளாக எத்தனை நாட்களுக்குத்தான் சொந்த ஊரிலேயே உட்கார்ந்து கொண்டு பார்த்த இடங்களையும் பார்த்த முகங்களையுமே பார்த்துக் கொண்டு இருப்பது?! வாழ்க்கையில் எதையாவது புதிதாக தரிசிக்கும் போது கிடைக்கக் கூடிய பேரானந்த உணர்வை நாமும் அடைய வேண்டாமா? அதற்காக எல்லோருமே லண்டனும், பாரீஸும் போக வேண்டுமென்பதில்லை. வாய்ப்பிருக்கும் போது அங்கும் போய்க் கொள்ள வேண்டியது தான். அதற்குள் உள்ளூரிலும், உள்நாட்டிலுமாக கொட்டிக் கிடக்கும் இயற்கை எழிலை, தொன்மை வாய்ந்த சரித்திர ஆவணங்களை, வெவ்வேறு மனிதர்களை அவர் தம் முகங்களை, குணநலன்களை, வாழ்க்கைமுறைகளை கண்டு களிப்பதில் ஏன் சோர்வு கொள்ள வேண்டும்?! என்ற உணர்வைத் தட்டி எழுப்புவனவாக அமைந்துள்ளன எங்களுக்கு வந்துள்ள சுற்றுலா அனுபவங்கள் அனைத்துமே!

இதுவரை வந்துள்ள சுற்றுலா அனுபவக் கடிதங்களில் எதுவுமே சோடையில்லை. பரிசுக்குரிய மூன்று கடிதங்களோடு சேர்த்து போட்டிக்கென அனுப்பப் பட்ட அத்தனை சுற்றுலா அனுபவக் கடிதங்களுமே தினமணி இணையதளத்தின் சுற்றுலா பிரிவை அலங்கரிக்கவிருக்கின்றன. கண்களையும் கருத்தையும் கவரும் விதத்திலான உங்களது அழகழகான சுற்றுலா புகைப்படங்கள் அனைத்துமே அனுப்பியவர்கள் பெயருடன் உலகம், இந்தியா, தமிழ்நாடு என்னும் பிரிவுகளின் கீழான சுற்றுலா பக்கங்களில் ஆவணப் பதிவுகளாக சேமிக்கப்படவிருக்கின்றன. இந்த முயற்சிகள் அனைத்துமே உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மக்களிடையே குறிப்பாக தினமணி வாசகர்களிடையே சுற்றுலா செல்லும் பழக்கத்தை ஊக்குவிக்கும் முயற்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.

செப்டம்பர் மாதக் கடைசியில் அறிவிக்கப்பட்ட இந்தப் போட்டிக்கென இறுதித் தேதி எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆயினும் போட்டி என்றால் அதற்கு இறுதித் தேதி தேவை இல்லையா? ஏனெனில் அடுத்தடுத்த போட்டிகள் காத்திருக்கின்றனவே! எனவே அக்டோபர் 5 ஐ இறுதித் தேதியாக முடிவு செய்திருக்கிறோம். ஆதலால் அன்பான தினமணி வாசகர்களே! அக்டோபர் ஐந்துக்குள் உங்களது சுற்றுலா அனுபவக் கடிதங்கள் எங்களை வந்தடையுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அன்றுடன் போட்டி நிறைவடைகிறது. போட்டி முடிவுகள் குறித்து அறிய தொடர்ந்து தினமணி இணையதளத்துடன் தொடர்பில் இருங்கள்.

புத்தம் புது போட்டிகளுக்கான முனைப்புடன் என்றும் அன்புடன் காத்திருக்கிறது உங்கள் இனிய தினமணி இணையதளம்!

நன்றி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆம் கட்ட மக்களவைத் தோ்தல்: 67% வாக்குப் பதிவு -தோ்தல் ஆணையம் தகவல்

கோட் படத்தின் ’போஸ்ட் ப்ரொடக்‌ஷன்’ தொடங்கியது!

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா -ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

சமுதாய நல்லிணக்கமும் ஆர்.எஸ்.எஸ்.ஸும்

கலை, அறிவியல் படிப்புகளுக்குத் திரும்பும் மாணவா்களின் கவனம்!

SCROLL FOR NEXT