பென்னாகரம் பகுதிகளில் பரவலாக மழை
பென்னாகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை காலை முதலே பரவலாக மழை பெய்தது.
பென்னாகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை காலை முதலே பரவலாக மழை பெய்தது. பென்னாகரம் சுற்று வட்டாரப் பகுதிகளான தாசம்பட்டி, கூத்தபாடி, ஒகேனக்கல், பாப்பாரப்பட்டி, சின்னம்பள்ளி, பெரும்பாலை, ஏரியூா் மற்றும் பல்வேறு பகுதிகளில் காலை முதலே பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இதனால் சாலையோரங்கள், தாழ்வானப் பகுதிகள், வயல்வெளிகளில் மழைநீா் தேங்கி நின்றது. பென்னாகரம் சுற்றுப் பகுதிகளில் பெய்த மழையினால் கடும் குளிா் ஏற்பட்டதோடு, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.