முகப்பு
கட்டுரைகள்

விழா நாயகனை இழந்துவிட்டோமே!

ஆயிரம் முறைக்கு மேல் மேடை ஏற்றப்பட்ட நாடகம் "கல்யாணத்தில் கலாட்டா'. தங்கவேலு, சரோஜா நடித்தனர். கல்யாண நேர டென்ஷன்களை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள், நடத்தப்பட்ட நாடகங்கள் பலவற்றுக்கும் பிள்ளையார் ச

Updated On : 20 செப்டம்பர், 2012 at 5:40 PM
பகிர்:

ஆயிரம் முறைக்கு மேல் மேடை ஏற்றப்பட்ட நாடகம் "கல்யாணத்தில் கலாட்டா'. தங்கவேலு, சரோஜா நடித்தனர். கல்யாண நேர டென்ஷன்களை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள், நடத்தப்பட்ட நாடகங்கள் பலவற்றுக்கும் பிள்ளையார் சுழி போட்டது இந்த நாடகம் தான். "வாஷிங்டனில் திருமணம்', "கலாட்டா கல்யாணம்', "கல்யாணமாம் கல்யாணம்' என்றெல்லாம் பின்னாளில் பல கதைகள் பிறப்பதற்கு இது வழி வகுத்தது என்று சொன்னால் தப்பில்லை.

  மயிலாப்பூரில் அவர் வடக்கு மாடவீதி பகுதியில் இருந்தார். நாங்கள் ராமகிருஷ்ணா மடம் அருகில் இருந்தோம். அதனால் மிகவும் சிறிய வயதில் இருந்தே அவருடைய குடும்பத்தினருடன் பழக்கம் இருந்தது. ரிஸர்வ் வங்கியில் பணிபுரிந்த நாள் முதல் நாடகங்கள் போட ஆரம்பித்தார்.

  அன்றைய நாடக உலகில் இவருக்குப் பெரிய மவுசு இருந்தது. கே.ஏ. தங்கவேலு பிரபலமாக சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த காலத்திலேயே இவருடைய நாடகத்திலும் தொடர்ந்து நடித்தார். "கல்யாணத்தில் கலாட்டா' என்ற அந்த நாடகம் அவ்வளவு பிரபலமாக இருந்தது. தங்கவேலு மகிழ்ச்சியாக நடித்துக் கொடுப்பார். தூர்தர்ஷனுக்காக கமல் நடிக்க, ராது நாடகம் ஒன்று வடித்துக் கொடுத்தார். அன்றைய நாளில் அது மிகவும் பேசப்பட்ட நாடகம். அவருக்குத் திரையுலகில் ரஜினி, கமல் போன்றவர்கள் நெருங்கிய நட்பு பாராட்டுபவர்களாக இருந்தனர். ஏவி.எம். சரவணன் மயிலாப்பூர் பி.எஸ். பள்ளிக்கூடத்தில் இவருக்கு வகுப்புத் தோழர்.

Advertisement

  சன் டி.வி.க்காக இவர் தன் "கல்யாணத்தில் கலாட்டா' நாடகத்தை சீரியலாக்கியபோது அதில் நான் நடித்தேன். அது எனக்குப் பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது. "சம்சார சங்கீதம்' என்ற இவருடைய இன்னொரு சீரியலிலும் நான் நடித்தேன்.

  தான் வாழ்ந்த 67 வருஷங்களில் 47 நாடகங்களை அவர் மேடையேற்றியிருக்கிறார். அவருடைய மயன் தியேட்டர்ஸ் மூலமாக 4500 நாடகங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. தொடர்ந்து 36 மணிநேரம் நாடகங்கள் நடத்தி சாதனை நிகழ்த்தியவர். காமெடி நாடகங்கள் மட்டுமன்றி சமூக நாடகங்கள் பலவும் எழுதியவர். காத்தாடி ராமமூர்த்தி, எஸ்.வி. சேகர், கிரேஸி மோகன், மெüலி, ஒய்.ஜி.மகேந்திரன் என்று நாடகக் கலைஞர்கள் பலர் இவருக்கு நெருக்கமானவர்களாக இருந்தனர். நாடகம் இவருடைய மூச்சாக இருந்தது. அவருடைய மனைவி, மகள், மருமகன் என அனைவருமே அவருடைய நாடகப் பணிக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

  இறப்பதற்குச் சில மணி நேரம் முன்பு வரை தன் பேரன் அம்ப்ரீஷ் நடிக்க இருந்த "கர்ணன்' நாடகத்துக்கான அரங்கு அமைப்புகளை வடிவமைப்பதற்காகவும் மேக்கப் உபகரணங்களுக்காகவும் ஓடிக் கொண்டிருந்தார்.

  நாடகக் கலைஞர்களை கெüரவிப்பதில் ராதுவுக்கு நிகர் யாருமில்லை. நடிகர்களை கெüரவிப்பது இப்போது ஒரு பிசினஸôக நடக்கிறது. நடிகர்களை வரவழைப்பதன் மூலம் அவர்களைக் காட்சிப் பொருளாக்கி பணம் சம்பாதிக்கிறார்கள்.

  ராது நாடகக் கலைஞர்களை மட்டுமல்ல; நாடகத்தில் பணியாற்றிய நலிந்த தொழிற்நுட்பக் கலைஞர்களையும் வரவழைத்து கெüரவிப்பார். சீன் மாற்றுகிற மணி போன்றவர்களை அவர் மேடையேற்றி கெüரவித்ததில் எந்தவித பொருளாதார பலனும் அவருக்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. பல கலைஞர்களை அவர் அப்படிக் கெüரவித்திருக்கிறார். நலிந்த கலைஞர்களுக்கு ஷீல்ட் கொடுப்பது மட்டுமன்றி மின்விசிறி, அயன் பாக்ஸ் போன்ற வீட்டு உபயோகப் பொருளைக் கொடுத்துப் பயன்பெறச் செய்வார். கலைஞர்களுக்கு விழா எடுத்து மகிழ்வதில் மன்னனாக இருந்தார்.

  வீழ்ந்தவர்களை விழா எடுத்துக் கெüரவிக்கும் இந்த விழா நாயகனின் வீழ்ச்சி என்னைப் போன்ற கலைஞர்களுக்குப் பேரிழப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.