கட்டுரைகள்

வெற்றி வாக்காளர்களுக்கே!

பதினாறாவது மக்களவைக்கான பொதுத்தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

முனைவா் அ. பிச்சை

பதினாறாவது மக்களவைக்கான பொதுத்தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவுகள் மே 16ஆம் நாள் அறிவிக்கப்பட உள்ளன. வெற்றி பெறப்போவது யார்? அமையப் போவது தனிக்கட்சி ஆட்சியா? கூட்டணி ஆட்சியா? இந்தக் கேள்விகளுக்கு விடை மே 16க்குப் பின்புதான் கிடைக்கும்!

32,87,263 சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும், 121 கோடி மக்களையும், சுமார் 92 கோடி வாக்காளர்களையும் கொண்ட இந்தப் பரந்து விரிந்த இந்திய தேசத்தில் ஒரு பொதுத் தேர்தலை நடத்தி, ஜனநாயக வேருக்கு நீரூற்றி வளர்ப்பது என்பது ஒரு இமாலயச் சாதனை.

இந்தச் சாதனைகளை 15 முறை நிகழ்த்தி, 16ஆவது முறையாக நிகழ்த்திக் கொண்டிருக்கும் இந்திய அரசுக்கு, குறிப்பாக இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு நன்றி பாராட்ட வேண்டும்; அதிலும் குறிப்பாக இச்சாதனைகளுக்கு உறுதுணையாக, உயிராக, உயிர்நாடியாக விளங்கும் இந்திய தேச மக்கள் வாழ்த்துக்கும், வணக்கத்துக்கும் உரியவர்கள்.

1950இல் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. அது சமயம் ஒரு மேலை நாட்டு நிருபர், அரசியல் விமர்சகர் பண்டித ஜவாஹர்லால் நேருவிடம், "நீங்கள் ஜனநாயகம் என்ற பெயரில் ஒரு விஷப் பரீட்சையை உங்கள் நாட்டில் நடத்தப் போகிறீர்கள்! உங்கள் தேசத்தில் ஜனநாயகம் தழைக்காது' - என்றார்.

வெகுண்டெழுந்த நேரு, விளக்கிச் சொல்லுங்கள் எனக் கேட்டார். அதற்கு அந்த நிருபர், "உங்கள் தேசத்தில் பெரும்பான்மையினர் படிப்பறிவு இல்லாதவர்கள்; அவர்களில் வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை அளித்தது தவறு; மாபெரும் தவறு' எனச் சுட்டிக் காட்டினார்.

அப்பொழுது பண்டித நேரு, நிதானமாகச் சொன்ன பதில் வருமாறு:

'ஐற் ண்ள் ற்ழ்ன்ங் ம்ஹத்ர்ழ்ண்ற்ஹ் ர்ச் ம்ஹ் ல்ங்ர்ல்ப்ங் ஹழ்ங் ண்ப்ப்ண்ற்ங்ழ்ஹற்ங், க்ஷன்ற் ற்ட்ங்ஹ் ஹழ்ங் ஐய்ற்ங்ப்ப்ண்ஞ்ங்ய்ற். பட்ங்ஹ் ட்ஹஸ்ங் ஞ்ர்ற் ய்ங்ழ்ள்ற்ண்ஸ்ரீ ஸ்ரீர்ம்ம்ர்ய் ள்ங்ய்ள்ங். பட்ங்ஹ் ஜ்ண்ப்ப் க்ஷங் ஹக்ஷப்ங் ற்ர் க்ங்ஸ்ரீண்க்ங் ஜ்ட்ண்ஸ்ரீட் ண்ள் ழ்ண்ஞ்ட்ற் ஹய்க் ஜ்ட்ண்ஸ்ரீட் ண்ள் ஜ்ழ்ர்ய்ஞ்'.

(என் மக்கள் பெரும்பாலோர் கல்வி கற்காதவர்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் அனைவரும் புத்திசாலிகள்; அவர்களிடம் கிராமியப் பொது அறிவு உண்டு; எது சரி, எது தவறு - என முடிவு எடுக்கும் திறன் அவர்களுக்கு நிரம்பவே உண்டு) என பதில் தந்தார்.

இந்திய மக்களின் பொது அறிவின் மீது (ஸ்ரீர்ம்ம்ர்ய் ள்ங்ய்ள்ங்) அவ்வளவு ஆழ்ந்த நம்பிக்கை நேருஜிக்கு. அதாவது நம்பிக்கை இன்று வரை பொய்த்துப் போகவில்லை; இனியும் பொய்த்துப் போகாது.

கடந்த 67 ஆண்டு கால வரலாற்றை ஆய்வு செய்தால், இந்தியர்கள் எவ்வளவு "புத்திசாலிகள்' என்பது நமக்கு நன்கு புலப்படும்.

அவசர நிலைப் பிரகடனத்தைத் தொடர்ந்து, 1977இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி பதவி இழந்தார். அதனைத் தொடர்ந்து மொரார்ஜி தேசாய் பதவி வகித்தது 2 வருடம் 4 மாதம். சரண் சிங் ஆட்சியோ 5 மாதங்கள் மட்டுமே!

நிலை இல்லாத ஆட்சி வந்துவிட்டதே என வருந்திய மக்கள், மீண்டும் இந்திரா காந்தியையே ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தினார்கள். நிலையான ஆட்சிக்கு வழிவகுத்தார்கள்.

1989-90இல் அமைந்த அரசில் வி.பி. சிங் பதவி வகித்தது 11 மாதங்களே; சந்திரசேகரின் ஆட்சியோ 8 மாதங்கள்தான் நீடித்தது. நடந்துவிட்ட தவறை மக்கள் திருத்தினார்கள். நரசிம்மராவை பிரதமராக்கினார்கள். மீண்டும் நிலையான ஆட்சிக்கு வித்திட்டார்கள்.

1996 பொதுத் தேர்தலில் எவருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத சூழல்; அந்நிலையில் வாஜ்பாய் பதவி வகித்தது 13 நாள்கள். தேவெ கவுடா 11 மாதங்கள். ஐ.கே. குஜரால் 11 மாதங்கள். அடுத்து நடைபெற்ற பொதுத் தேர்தலில், மக்கள் மீண்டும் விழித்துக் கொண்டார்கள். நிலையான ஆட்சிக்கு வழி பிறந்தது.

ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க அதிபர் தேர்தலில் முதல் தடவை தோற்றுப் போனார். செய்தி அறிந்த பின் வீட்டை விட்டு வெளியில் வந்த லிங்கனை, நிருபர்கள் நெருங்கினர்; சந்திப்பைத் தவிர்க்க விரும்பிய லிங்கன் வேகமாக நடக்கத் தொடங்கினார்.

அப்பொழுது அவரது கால் சறுக்கிவிட்டது. அதனைக் கண்ட ஒரு குறும்புக் கார நிருபர்: "இது வீழ்ச்சியா?' (ஐள் ண்ற் ஹ ச்ஹப்ப்?) எனக் கேட்டார். ஆனால் லிங்கனோ, "இது வீழ்ச்சியல்ல; சறுக்கல்தான்' (ஐற் ண்ள் ய்ர்ற் ஹ ச்ஹப்ப், த்ன்ள்ற் ஹ ள்ப்ண்ல்) என சட்டென பதில் சொன்னார்.

அதேபோல் தேர்தலில் இந்திய தேசமக்கள் சரியான முடிவையே எடுப்பார்கள்; சறுக்கிவிட மாட்டார்கள்; ஒரு வேளை, எதிர்பாராத விதமாக, சறுக்கல் ஏற்பட்டால், உடனை அதனைச் சரி செய்து விடுவார்கள். அவ்வளவு புத்திசாலிகள்

அவர்கள்.

பதினைந்து பொதுத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றது மக்களே! இந்தத் தேர்தலிலும் வெற்றி பெறப் போவது தனி மனிதரோ, தனி அமைப்போ, தனி சித்தாந்தமோ அல்ல!

வரப்போகும் வெற்றி இந்தியருக்கே! வாழ்க இந்திய மக்கள்! வளர்க இந்திய

ஜனநாயகம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

SCROLL FOR NEXT