கட்டுரைகள்

போராட்டம் முடியவில்லை

த​மிழ்​நாட்​டின் முதன்​மை​யான இயற்கை வேளாண் அறி​ஞ​ரான கோ.​ நம்​மாழ்​வார்,​​ 1938 ஏப்​ரல் 6-ஆம் தேதி

சா. ஜெயப்பிரகாஷ்

த​மிழ்​நாட்​டின் முதன்​மை​யான இயற்கை வேளாண் அறி​ஞ​ரான கோ.​ நம்​மாழ்​வார்,​​ 1938 ஏப்​ரல் 6-ஆம் தேதி தஞ்சை மாவட்​டம் திருக்​காட்​டுப்​பள்​ளிக்கு அரு​கே​யுள்ள இளங்​காட்​டில் பிறந்​தார்.​ அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழ​கத்​தில் "இளங்​கலை வேளாண்மை' முடித்து அர​சுப் பணி​யில் சேர்ந்து -​ மூன்​றாண்​டு​க​ளில் வெளியே வந்​த​ôர்.​

அ​தன்​பி​றகு மாநி​லம் முழு​வ​தும் அவர் கால்​ப​தி​யாத மாவட்​டமே இல்லை.​ போகிற இட​மெங்​கும் ஏரா​ள​மான அமைப்​பு​க​ளைத் தொடங்​கி​னார்.​ "குடும்​பம்',​ "லிசா',​ "மழைக்​கான எக்​லா​ஜிக்​கள் நிறு​வ​னம்',​ "இந்​திய அங்​கக வேளாண்மை சங்​கம்' போன்​றவை அவர் விதைத்த விதை​கள்.​

"தாய் மண்' ​(இயற்கை வழி உழ​வாண்மை பாட​நூல்)​,​​ "உழ​வுக்​கும் உண்டு வர​லாறு',​ "தாய் மண்ணே வணக்​கம்',​ "நெல்​லைக் காப்​போம்',​ "வயிற்​றுக்​குச் சோறி​டல் வேண்​டும்',​ "இனி விதை​களே பேரா​யு​தம்',​ "நோயி​னைக் கொண்​டா​டு​வோம்',​ "எந்​நா​டு​டையே இயற்​கையே போற்றி',​ "பூமித்​தாயே',​ "மரபை அழிக்​கும் மர​பணு மாற்று விதை​கள்',​ "களை எடு' போன்ற நூல்​களை எழு​தி​

யுள்​ளார்.​

அ​வர் இயற்கை வேளாண்​மைக்​கான போராளி மட்​டு​மல்ல.​ முழு​மை​யான வாழ்​வி​யல் பேர​றி​ஞர்.​ தமி​ழ​கத்​துக்கு பெரும்​ப​குதி தண்​ணீரை வழங்​கும் மேற்​குத் தொடர்ச்சி மலை​யின் சோலைக்​கா​டு​க​ளைப் பாது​காக்க வேண்​டும் என்று குரல் எழுப்​பி​னார்.​ பாலாறு பாது​காக்​கப்​பட போராட்​டங்​களை நடத்​தி​னார்.​

சு​னா​மி​யால் பாதிக்​கப்​பட்டு,​​ உப்​புக் காடாய் மாறிய விளை நிலங்​களை மிகக்​கு​று​கிய காலத்​தில் பயிர் விளை​யும் பூமி​யாக மாற்​றிக் காட்​டி​னார்.​ இந்​தோ​னே​சி​யா​வில் சுனாமி பாதிக்​கப்​பட்ட பகு​தி​யில் 30 மாதிரிப் பண்​ணை​கள் நம்​மாழ்​வா​ரால் அமைக்​கப்​பட்​டன.​

இ​யற்கை உழ​வாண்​மைக்​கான 25 நாள் நடைப்​ப​ய​ணம்,​​ சுதேசி பயிர் வளர்ப்​புக்​கான பிர​சா​ரம்,​​ அங்​கக வேளாண்​மைக்​கான பிர​சா​ரம்,​​ கரிம வேளாண்​மைக்​கான பிர​சா​ரம் என மாநி​லத்​தைச் சுற்​றிச்​சுற்றி பிர​சா​ரம் செய்​தார்.​

த​னது இறு​திக் காலத்​தில் அவர் தொடங்​கிய யுத்​தம் இன்​றைக்​கும் தஞ்​சைப் பகு​தி​யில் தொடர்ந்து கொண்டே இருக்​கி​றது.​

மீத்​தேன் திட்ட எதிர்ப்​புப் போராட்​டம் நடத்​தி​னார்.​ இதற்​காக கிரா​மங்​கள் தோறும் சென்று பேசி​னார்.​ ​

மு​னை​வர் பழ.​ கோம​தி​நா​ய​கத்​தின் நினைவு நாளில் ​(2013 டிச.​ 29) தஞ்சை முள்​ளி​வாய்க்​கால் முற்​றத்​தில் நடை​பெற்ற கூட்​டம்​தான் நம்​மாழ்​வார் ஏறிய கடைசி மேடை.​

நீண்​ட​நாள்​க​ளாக ஊர் ஊரா​கச் சுற்​றித் திரிந்​த​தால் அவர் உடல் நலி​வுற்​றி​​ருந்​தது.​ கடும் காய்ச்​ச​லு​டன் காரில் வந்​தார்.​ பேசி​னார்.​ ​

ம​று​நாள் ​(டிச.​ 30) இறந்​து​விட்​டார்.​ இயற்​கை​யோடு கலந்​தார் என்​று​தான் சொல்ல வேண்​டும்.​ போராட்​டக் களத்​தில் முகா​மிட்​டி​ருந்​த​போதே நம்​மாழ்​வார் மறைந்​தார்.​ தஞ்​சை​யில் அவ​ரது உட​லுக்கு ஏரா​ள​மா​னோர் அஞ்சலி செலுத்​தி​னர்.​

க​ரூர் மாவட்​டம் கட​வூர் ஒன்​றி​யத்​துக்​குள்​பட்ட சுரு​மான்​பட்​டி​யில் 35 ஏக்​கர் பரப்​ப​ள​வில் நம்​மாழ்​வார் அமைத்த வாழ்​வி​யல் பயிற்​சிப் பல்​க​லைக்​க​ழ​க​மான வான​கத்​தில் ​(நம்​மாழ்​வார் உயிர்ச்​சூ​ழல் நடு​வம்)​ அவ​ரது உடல் புதைக்​கப்​பட்​டது.​

உடலை எப்​ப​டிப் புதைப்​பது என்​ப​து​கூட அங்கே தெரிந்து கொள்ள வேண்​டிய செய்​தி​யா​கத்​தான் இருந்​தது.​

இன்​றைக்​கும் அங்கே ஏரா​ள​மான மாண​வர்​க​ளும்,​​ விவ​சா​யி​க​ளும் வரு​கின்​ற​னர்;​ பயிற்​சி​கள் தொடர்ந்து நடக்​கின்​றன.​

நல்ல வேளையாக "வான​கம்' இளை​ஞர்​கள் கையில் இருக்​கி​றது.​ இளை​ஞர்​களே பயிற்​சி​யா​ளர்​க​ளா​க​வும் இருக்​கின்​ற​னர்.​ பல புதிய முன்​னெ​டுப்​பு​கள் மேற்​கொள்​ளப்​ப​டு​கின்​றன.​

த​மி​ழ​கம் முழு​வ​தும் நம்​மாழ்​வா​ரின் வழி​காட்​டு​தல்​க​ளில் தொடங்​கப்​பட்ட பண்​ணை​கள் இருக்​கின்​றன.​ ஏரா​ள​மான தன்​னார்​வ​லர்​கள் இருக்​கி​றார்​கள்.​ ஆனா​லும்,​​ நடை​பெற்​றுக் கொண்​டி​ருக்​கும் சீர​ழி​வு​க​ளின் அள​வுக்​கேற்ப மாற்று நட​வ​டிக்​கை​கள் போது​மா​ன​தா​கப் புலப்​ப​ட​வில்லை.​

மண்​ணை​யும்,​​ மனி​த​னை​யும் மல​டாக்​கும் ரசா​யன உரங்​க​ளுக்கு எதி​ரான போராட்​டம்...​

ம​லை​க​ளைச் சுரண்டியும்,​​ மரங்​களை வெட்டியும்,​​ நீர்​நி​லை​களை மூடியும் இயற்கை வளங்​க​ளைக் கொள்​ளை​ய​டித்து சூழ​லி​ய​லைச் சிதைப்​ப​தற்கு எதி​ரான போராட்​டம்...​

மண்​ணும் மலை​யும்,​​ காடும் கானு​யிர்​க​ளும் மனி​த​னு​டன் இணைந்தே இருக்க வேண்​டும் என்​கிற பார்​வையை உரு​வாக்​கு​வ​தற்​கான இயக்​கம்...​

இப்​படி நம்​மாழ்​வார் பிடித்து இழுந்து வந்த தேர்,​​ தற்​போது நடு​வழி​யில் நிற்​கி​றது.​ அத​னைத் தொடர்ந்து இழுத்​துச் செல்​வ​தற்​குப் பெரும்​படை தேவைப்​ப​டு​கி​றது.​

இந்​தப் படை பொது​மக்​க​ளாகிய நமது  விழிப்​பு​ணர்​வின் மூலம்​தான் உரு​வாக முடி​யும்.​

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT